சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கிருமியை கொல்லும் நீல ஒளி!

Added : ஏப் 11, 2019
Advertisement
 கிருமியை கொல்லும் நீல ஒளி!

நோய்களை உண்டாக்கும் கிருமிகள், அவற்றைக் கொல்லப் பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளையே எதிர்த்து வாழப் பழகி வருகின்றன.

இதனால், புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க, ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இருந்தாலும், நோய் கிருமிகளின் போராட்டக் குணத்தை தணிக்க, வேறு வழிகளையும் விஞ்ஞானிகள் யோசித்து வருகின்றனர். அதில் ஒன்று தான், நீல ஒளி வைத்தியம்.

அமெரிக்காவிலுள்ள பர்டியூ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீதான சோதனை மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். எம்.எஸ்.ஆர்.ஏ., போன்ற கிருமிகளை, நீல நிற ஒளியில் மூழ்கடித்தால், அக்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

இந்த தருணத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் தங்கள் வேலையைச் செய்து, கிருமிகளை நாசம் செய்ய முடியும்.

மனிதர்களுக்கு புண்கள் மீது கிருமிகள் தொற்றினால், நீல ஒளிக் கதிர்களைப் பாய்ச்சும் ஒரு சிறிய கருவியை, ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

அடுத்த சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X