சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மின் வாகன கண்டுபிடிப்புகளை காப்பியடிக்கலாம்!

Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மின் வாகன கண்டுபிடிப்புகளை காப்பியடிக்கலாம்!

முதலில் டெஸ்லா, இப்போது டொயோட்டா. மின்சார கார்களை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கில், டொயோட்டா, தன் பதிவு செய்த கண்டுபிடிப்புகளை, இனி எவரும் பயன்படுத்தலாம் என்று அண்மையில் அறிவித்துள்ளது.

பெட்ரோலியம் அல்லாத எரிபொருளில் ஓடும் கார்களை தயாரிக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக டொயோட்டா ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதன் விளைவாக, பாதி மின்சாரம், மீதி பெட்ரோலியத்தில் ஓடும், 'ஹைப்ரிட்' கார் இயந்திரங்கள், எரிபொருள் கலன் எனப்படும், 'பியூயல் செல்' இயந்திரங்கள் என, 23 ஆயித்திற்கும் மேல் புதுமைகளை டொயோட்டா பதிவு செய்துள்ளது.

இவை அனைத்தையும் எவரும் கட்டணமின்றி பயன்படுத்தலாம் என, டொயோட்டா அறிவித்துள்ளது. சிக்கலான வரைபடங்கள், சமன்பாடுகளைக் கொண்ட அந்தக் கண்டுபிடிப்புகள் புரியாவிட்டால், சிறிது கட்டணம் வாங்கி ஆலோசனை தரவும் டொயோட்டா நிர்வாகம் தயாராக உள்ளது.

இருந்தாலும், முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் அதன் கார்கள் பற்றிய விபரங்களை, டொயோட்டா இலவசமாக தர முன்வரவில்லை. ஆனால், டெஸ்லா மோட்டார்சின் அதிபர் எலான் மஸ்க், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதைச் செய்துவிட்டார்.

மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்பதால், தங்கள் கண்டுபிடிப்புகளைக் கூட எவரும் அனுமதியோ, கட்டணமோ இன்றி பயன்படுத்தலாம் என, அறிவித்தார். ஓசூர், கோவை, சென்னை வாகனப் பொறியாளர்களுக்கு இது தெரியுமா?

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
13-ஏப்-201916:47:20 IST Report Abuse
Manikandan Sivalingam முதலில் மின்சார வாகனங்களை தயாரிக்கவும்,அதனை சந்தைபடுத்தவும் அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டும்.3 கிலோமிட்டருக்கு ஒரு பெட்ரோல் இருப்பதை போன்று பைக் சார்ஜ் மையங்கள் அமைக்கபட வேண்டும். மின்சார வாகனங்களுக்கு மானிய தொகை அளிக்க வேண்டும்.... கார்பரேட் முதலைகளிடம் பணத்தை வாங்கி கட்சி நடத்தும் அரசியலில் இது சாத்தியம் ஆகாது?????
Rate this:
Share this comment
Visu Samy - chennai,இந்தியா
19-ஏப்-201908:53:25 IST Report Abuse
Visu Samyபேட்டரி தான் பெரும் பிரச்சினையே முன்னெல்லாம் பாட்டரிகள் 7 வருடம் வரை உழைத்தன இப்போதைய பாட்டெரிகள் 1 வருடம் வர்றேன்ட்டி என்றல் ஒரு வருடம் ஒரு மாதத்தில் பழுதுகிற மாதிரி தயாரிக்கிறார்கள் இதில் சார்ஜ் செய்ய ஆகும் நேரம் மற்றொரு பிரச்சினை ஆகவே இது பயன்பாட்டுக்கு வர நீண்ட நெடுங்காலம் ஆகும் .அரசாங்கமே பட்டேரிகளை வாடகைக்கு விடும் நிலையங்களை அமைத்து அந்த பட்டேரிகளை வேறு யாரும் வாங்கவோ விற்க கூடாது என்று வைத்தால் ஓரளவுக்கு பயன்பட்டுக்கு வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X