சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவில் முதல் தனியார் ஊர்தி!

Added : ஏப் 11, 2019
Advertisement
நிலாவில் முதல் தனியார் ஊர்தி!

இஸ்ரேலைச் சேர்ந்த, ஸ்பேஸ் ஐ.எல்., என்ற ஆராய்ச்சிக் குழு, விரைவில் நிலாவில் ஒரு சிறிய ஊர்தியை தரையிறக்கவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், சந்திரனின் மேற்பரப்பில் சில மீட்டர் தொலைவாவது பயணிக்கும் சிறிய ஊர்தியை அனுப்பும் தனியார் அமைப்புக்கு, பல கோடி ரூபாய் பரிசு தரப்போவதாக, 'கூகுளின் லுானார் எக்ஸ் பிரைஸ்' போட்டியை அறிவித்தது.

இதில் இந்தியாவிலுள்ள, 'டீம் இண்டஸ்' உள்ளிட்ட, பல நாடுகளிலிருந்து விண்வெளி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான காலக்கெடுவை பல முறை நீட்டிக்க கோரிக்கைகள் வந்தபடியே இருந்ததால், கூகுள் போட்டியை ரத்து செய்தது.

போட்டியில் பங்கு பெற நினைத்த ஸ்பேஸ் ஐ.எல்., 'பெரெசீட்' என்ற நான்கு கால்களைக் கொண்ட ஒரு விண்கலனை வடிவமைத்தது.

வெறும், 600 கிலோ எடை கொண்ட இந்த விண்கலனை, கடந்த பிப்ரவரியில், அமெரிக்காவின் கேப் கனேவெரல் ஏவு தளத்திலிருந்து, 'பால்கன் - 9' ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவித் தந்தது ஸ்பேஸ் எக்ஸ்.

அப்போது ஏவப்பட்ட பெரசீட் கலன், ஏப்ரல் 4 அன்று நிலாவை நெருங்கி வட்டமிட ஆரம்பித்தது. ஏப்ரல் 11 அன்று திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தால், பெரெசீட், நிலாவில் தரையிறங்கும்.

அதற்கடுத்து, நிலாவின் காந்தப்புலம் குறித்து, பெரெசீட் சில சோதனைகளைச் செய்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும். தவிர, அந்தக் கலனில் இஸ்ரேல் நாட்டு வரலாற்றை நினைவூட்டும் சில பொருட்களையும், ஸ்பேஸ் ஐ.எல்., வைத்து அனுப்பிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X