பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,50,302 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சத்யபிரதா சாஹூ, தமிழகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 67, 729 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அட்டை தவிர்த்து 13 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.


4,185 வழக்குகள்


தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.127.66 கோடி பணமும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையால் ரூ.37.78 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.





தமிழகம் முழுவதும் 67, 729 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 1,50,302 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


சைகை மூலம் விளக்கம்


முதல்முறையாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவின் பேட்டியை மாற்றுத்திறனாளிகளும் புரிந்து கொள்ளும் வகையில், அலுவலர் ஒருவர் மூலம் சைகை மூலம் விளக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரும் சத்யபிரதா சாஹூவின் பேட்டியை வரிக்கு வரி சைகை மூலம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
11-ஏப்-201920:32:59 IST Report Abuse
Ray ஆள்பவர்களுக்கு தேவையான இடங்களில் இவை நல்ல செயல்பாட்டில் இருக்கும் எதிர்க்கட்சி "கை" ஓங்கியிருக்கும் இடங்களில் மக்கர் செய்யலாம் இன்று ஆந்திராவில் கண்டோமே
Rate this:
Share this comment
Cancel
Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
11-ஏப்-201914:14:18 IST Report Abuse
Rajendran Kulandaisamy ஏன். இப்படி எல்லாம்....... தேர்தல் நடக்க வழி இல்லாத சூழ் நிலையா? அட...அறிவாளிகளா.... எதற்கு ஓட்டு எந்திரம்... ஆதார் இருக்குல்ல.... ஒட்டு போடுவதற்கு 5 நிமிடமாவது ஆகுதா...
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
11-ஏப்-201913:00:33 IST Report Abuse
Ab Cd புரோகிராம் எல்லாம் தயார் செய்தகிவிட்டதா?
Rate this:
Share this comment
Sittu Kuruvi - covai,இந்தியா
11-ஏப்-201913:39:57 IST Report Abuse
Sittu Kuruviஎந்த மிஷின் எங்க போகுதுனு கடைசி நேரத்துல தான் தெரியும், கேண்டிடேட் வரிசை லிஸ்டும் ஒவ்வொரு வாக்கு சாவுடிக்கும் மாறுமாம். அதனால் உங்க ப்ரோக்ராம் பொய் எல்லாம் வேலைக்கு ஆகாது. லிஸ்ட் ஒட்டும் போது அணைத்து கட்சி பிரதிநிதியும் கூட இருப்பாங்களாம். சந்தேகம் இருந்த கலெக்டர் ஆபிஸ் போய் பாருங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X