மோடி வெல்ல முடியாதவர் அல்ல: சோனியா

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ரேபரேலி: பிரதமர் மோடி வெல்ல முடியாதவர் அல்ல என ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறினார்.








பேரணி


உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், கிழக்கு பகுதி பொது செயலர் பிரியங்கா உடன் சென்றனர்.






வேட்புமனு தாக்கலுக்கு முன்னர், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஏற்பாடு செய்த பூஜையில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து பேரணியாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மே 6 ம் தேதி இங்கு தேர்தல் நடக்க உள்ளது. சோனியாவை எதிர்த்து பா.ஜ., சார்பில், காங்கிரசிலிருந்து விலகிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் , சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை.







எதுவும் செய்யவில்லை

பின்னர் ராகுல் கூறுகையில், இந்தியாவில் பலர், தாங்கள் நாட்டை விட பெரியவர்கள். வெல்ல முடியாதவர்கள் என கருதிய சிலர் இருந்தனர். கடந்த 5 ஆண்டில், நாட்டு மக்களுக்கு மோடி எதையும் செய்யவில்லை. ஊழல் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதிக்க தயாராக உள்ளாரா என்றார்.


சவால்


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறுகையில், ரேபரேலியில் வெற்றி பெறுவேன். பிரதமர் மோடிக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். மோடி வெல்ல முடியாதவர் அல்ல. 2004 தேர்தலை மறக்க வேண்டாம். வாஜ்பாய் வெல்ல முடியாதவராக இருந்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun -  ( Posted via: Dinamalar Android App )
11-ஏப்-201917:32:49 IST Report Abuse
Arun . why Italians comment about our politics and politicians?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-ஏப்-201917:31:47 IST Report Abuse
madhavan rajan காங்கிரஸ் ஒருமுறையாவது மோடியை குஜராத்தில் வென்று அரசு அமைத்திருந்தால் இவர் கூறுவதை ஏற்கலாம். அப்படி செய்ய முடியாதவர்களுக்கு பேச அருகதையில்லை. இவர்கள்தான் அவர்மீது பொய் வழக்குகளை போட்டு அவரை இந்நாட்டின் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள். இந்திராவுக்கு பிறகு எப்போதும் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதில்லை என்பதை சோனியா மறந்துவிட்டார். ராஜீவ் காந்தி மெஜாரிட்டி பெற்று பிரதமரானது இந்திரா காந்தி கொல்லப்பட்ட அனுதாப வோட்டுக்களால். நரசிம்ம ராவ் பிரதமரானது ராஜீவ் கொலையின் அனுதாப வோட்டுக்களால்.
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
11-ஏப்-201916:39:19 IST Report Abuse
sripa சோனியா ஜி. உங்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் நீங்கள் இவ்வாறு புலபுகிறீர்கள். யார் மக்களுக்கு நல்லது செய்கிறரரோ அவர் தேர்தலி கண்டு பயப்பட தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் மக்களுக்கு துரோகம் செய்திர்கள் அதனால் தான் இப்படி புலம்புகிறீர்கள். உங்கள் எதிர்ப்பை எல்லாம் மீறி மோடி மீண்டும் பிரதமர் ஆகா வருவார். வந்தவுடன் உங்களுக்கும் உங்களை சரத்தோருக்கும் சட்டப்படி தகுந்த தண்டனை வாஙகிதருவர். இன்னும் ஒன்னரை மதம் தான் பொறுத்திருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X