பொது செய்தி

இந்தியா

ரபேல் விமானத்தில் பாக். அதிகாரிகளுக்கு பயிற்சி? பிரான்ஸ் மறுப்பு

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி ; பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகளுக்கு ரபேல் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. இந்தத் தகவல் இந்திய அளவில் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இந்தியாவுக்கான பிரானஸ் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா, பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் முக்கிய ஷரத்துகளில் ஒன்று பாக்.,கிற்கு ரபேல் விமானங்கள் விற்கப்படக்கூடாது என்பதாகும். இந்தநிலையில், இணையதளம் ஒன்றில், 'கதார் விமானப்படைக்காக 2017, நவம்பரில் ரபேல் விமான பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்படி பயிற்சி எடுத்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள்' என்று செய்தி வெளியிடப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல நாடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோல பாகிஸ்தான் ராணுவமும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவத் தளவாடங்களை வாங்கி பயன்படுத்தியுள்ளது. அப்படி கத்தார் நாட்டில் இருந்த பாகிஸ்தான் விமானப்படையினருக்கு தான் ரபேல் நிறுவனம் பயிற்சி கொடுத்தது என்று கூறப்படுகிறது.
இந்தத் தகவல் இந்தியாவில் அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், அது குறித்து, இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர், அலெக்சாண்டர் சீக்லர், 'அந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை என்னால் உறுதிபட தெரிவிக்க முடியும்' என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஏப்-201920:31:18 IST Report Abuse
Cheran Perumal கோர்ட்டு விமானம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை என்று தீர்ப்பு சொல்லிவிடுமோ என்று பயந்து ராகுல் இந்த பொய்யை கிளப்பி விட்டுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
11-ஏப்-201919:31:47 IST Report Abuse
Natarajan Ramasamy இது போன்ற செயல்கள் எதிர்பார்த்தது. ரபேல் போர் விமானம் ஒன்று. அதன் செயல்தன்மையை நமக்கு வேண்டியபடி நாம் உபயோகிக்கும் missiles , BOMBS எப்படி செலுத்துவது என்பது வேறு. basic விமானம் செயல்பாடு பற்றி கவலை செய்து பயன் இல்லை. அது எப்படியும் எதிரிகளுக்கு கிடைக்கும்.எகிப்து,கத்தார் rafayle வாங்கியுள்ளது. அங்கிருந்து விமான செயல்பாடு எப்படியும் pak இருக்கு கிடைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:09:39 IST Report Abuse
kudiyanathfans இந்த விஷயம் பாகிஸ்தானுக்கே தெரியாது போங்கடா. பாகிஸ்தான் மேல பாசம் இருந்தா அங்கேயே போங்க. நாடு நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X