அதிக ஓட்டுப்பதிவு பா.ஜ.,வுக்கு சாதகம்

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (86)
Share
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ, ஓட்டுப்பதிவு

புதுடில்லி: முதல் கட்ட ஓட்டுப் பதிவு அதிகமாக இருந்ததாலும் தனது கூட்டங்களுக்கு அதிகம் பேர் திரண்டதாலும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் கட்சிகளின் வெற்றிகள் குறித்து பல ஊடகங்களும் பல கருத்துக் கணிப்புகளை நடத்தின. பெரும்பாலானவை பா.ஜ.,வுக்கே சாதகமாக முடிவுகள் இருக்கும் என தெரிவித்தன. பா.ஜ., மட்டுமே 250 இடங்கள் வரை பெறும் என்கின்றன கணிப்புகள்.


latest tamil newsதேர்தல் முடிவுகளை வைத்து சூதாடுபவர்களும் பா.ஜ.,வுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கும் என்கிறார்கள். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தளங்களிலும் பா.ஜ., மெஜாரிட்டி பெறும் என்று பதிவிடப்படுகின்றன.தேர்லுக்குப் பிறகு டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்.காங்., பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பா.ஜ., உடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது.

ஓட்டுப்பதிவும் சுறுசுறுப்பாக இருப்பதால் பா.ஜ.,வுக்கு வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக மோடி நம்புகிறார் என்கிறது டில்லி வட்டாரம்.


மோடி அரசு அலை: பிரதமர் பேச்சு


நாடு முழுவதும் பெரிய அளவில் மோடி அரசு அலை வீசுவதை உணர்வதாக அசாமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.


latest tamil newsசில்சார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டில் எந்த மாதிரியான அலை வீசுகிறது என்பது உங்களது உற்சாகத்தை பார்க்கும் போது தெரிகிறது. நாட்டில் பல பகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் மோடி அரசு என்ற அலை பெரிய அளவில் வீசுவது தெளிவாக தெரிகிறது. பிரச்னைகளை உருவாக்குவதே காங்கிரசின் வரலாறு. 1947 ல் மத ரீதியில் பிரிவினை ஏற்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நலன் எப்படி இருக்கும் என்பது குறித்து அக்கட்சி சிந்திக்கவில்லை. என்றார்.


latest tamil newsமங்கல்தாய் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் மற்றொரு கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதில் யாராவது சமரசம் செய்வார்களா? ஆனால், எதிர்பாராதவிதமாக, எதிர்க்கட்சிகள் இதனை செய்ய விரும்புகிறன. ராணுவம் பல முறை தைரியத்தை வெளிப்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் ஆதாரம் கேட்டு அவமதிக்கிறது என்றார்.


latest tamil newsமுன்னதாக பீஹாரின் பகல்பூர் என்ற இடத்தில் நடந்த பொதுகூட்டத்தில் மோடி பேசுகையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், காங்கிரசின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வாரிசு அரசியல் முடிவுக்கு வரும். ஏழைகளின் பெயரில் அடிக்கப்படும் கொள்ளை நிறுத்தப்படும். மதம் ஜாதி பெயரில் நடக்கும் அரசியல் முடிவுக்கு வரும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
15-ஏப்-201910:21:17 IST Report Abuse
Prabu.KTK சபாஷ், மிகச்சரியான கருத்து இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு, ஹிந்து விரோத, தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஏப்-201911:51:47 IST Report Abuse
Malick Raja chorka chowkidaar hai hai ..
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
15-ஏப்-201911:21:44 IST Report Abuse
Nallavan Nallavan...
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
13-ஏப்-201907:57:26 IST Report Abuse
chander KAASU KODUTHTHU POTTA OTTU
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X