மாயாவதி தான் பிரதமர்! பகுஜன் கூட்டணி, 'காமெடி'

Updated : ஏப் 11, 2019 | Added : ஏப் 11, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

'லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றதும், மாயாவதி தான் பிரதமராவார்' என, ஹரியானாவில், பகுஜன் சமாஜ் மற்றும் கூட்டணியினர் பிரசாரம் செய்கின்றனர். இதை கேட்கும் மக்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.latest tamil newsஹரியானாவில், 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. முக்கிய நகரமான, குருஷேத்ரா அடங்கியுள்ள, குருஷேத்ரா தொகுதியில், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், ராஜ்குமார் சைனி வெற்றி பெற்றார். எம்.பி.,யான இவர், பா.ஜ.,வில் இருந்து, சமீபத்தில் விலகி, 'லோக்தந்த்ர சுதந்திரா கட்சி' என்ற கட்சியை உருவாக்கிஉள்ளார். இந்த கட்சியும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன.

சோனேபட், பிவானி மகேந்தர்கர் ஆகிய தொகுதிகள், சைனி கட்சிக்கும், மற்றவை, பகுஜன் சமாஜுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான குருஷேத்ராவின் லோக்சபா தொகுதியில், ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நகரம் இதிகாச காலத்து, மஹாபாரத போரில் வரும் கதைப்படி, 'குருஷேத்ரா' போர் நடந்த இடமாக, ஹிந்துக்களால் கருதப்படுகிறது. இதனால், புனித நகரான இங்கு, இறைச்சி மற்றும் மது பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில், ஜாட் இனத்தவர்களை விட, சைனி பிரிவினர் அதிகம் உள்ளனர்.

அதனால், சைனி பிரிவினர் தான், அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தொகுதியில், சைனி பிரிவு அல்லாத, தொழில்அதிபர், ஓம் பிரகாஷ் ஜிண்டால், 1996ல், காங்., சார்பில் வெற்றி பெற்றார். இவரது மகன், காங்கிரசின், நவீன் ஜிண்டால், 2004 மற்றும் 2014 தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் இவர் போட்டியிட்டாலும், ஜிண்டால் நிறுவனம் தொடர்பான, நிலக்கரி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், நவீன் ஜிண்டால் வெற்றி பெறவில்லை.


latest tamil newsஇந்திய தேசிய லோக்தளம் கட்சி வேட்பாளர், பல்பீர் சிங் இரண்டாம் இடம் பெற்றார். பா.ஜ.,வின் தற்போதைய, எம்.பி., ராஜ்குமார் சைனி வெற்றி பெற்றார். 'பா.ஜ.,வின் ஆட்சி முடிந்து விடும். மீண்டும் புதிய ஆட்சி, புதிய பிரதமரை நாடு பார்க்க போகிறது. மாநிலங்களில் உள்ள கட்சிகள், இந்த தேர்தலில் வெற்றி பெற்று, மாயாவதி பிரதமராவார். எனவே, பகுஜன் சமாஜ் - எல்.எஸ்.பி., அணியை ஆதரியுங்கள்' என, ராஜ்குமார் சைனி, பிரசாரம் செய்கிறார். அதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள், சைனி காலை எப்போது வாருவது என, நேரம் பார்த்து வருகின்றன.

- ஸ்மிருதி சர்மா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
15-ஏப்-201919:30:56 IST Report Abuse
Kannan எனப்பா எந்த ஒரு அனுபவமும் இல்லாத ராகா பிரதமர் ஆக துடிக்கலாம், முதல்வராக இருந்த மாயா அககூடாதா? மாயாவிற்கு இருக்கும் ஒரு தில் பப்பு இடத்தில் இல்லையே? இன்னும் டெல்லிக்கு கேஜரிவளுடன் ஒப்பந்தம் செய்ய முட்யலையே? என்ன தலைமை திறனற்ற தலை. இவரெல்லாம் பாகிஸ்தானுக்கு என்ன பதில் சொல்ல்வது என்று திணறியே நம்ம மௌன மோகன் மாதிரி சும்மா இருப்பதே சுகம் என்பர்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஏப்-201916:10:05 IST Report Abuse
Endrum Indian இதை எதிர்த்து யாராவது பேசினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும், ஏனெனில் அவர் தலித் இனத்தை சேர்ந்தவராதலால்??? என்ன சரிதானே சொல்வது .
Rate this:
Cancel
partha - chennai,இந்தியா
12-ஏப்-201914:16:19 IST Report Abuse
partha மாயாவதி பிரதமரானால் உ பி இல் உள்ள முஸ்லிம்களை ஒன்றுசேர்த்து ஒரு மினி பாகிஸ்தான் உருவாக்கிவிடுவார்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
13-ஏப்-201908:08:01 IST Report Abuse
Sathya Dhara இது கண்டிப்பாக நடக்கும். முஸ்லீம்களுக்கு அடிமை ஆகி உத்தர பிரதேச மக்களையும் அடிமை ஆக்க நிம்மதி இழக்க வைத்து மீண்டும் துர்நாற்றம் அடிக்க வைத்தும் விடுவார்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X