அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை காய்ச்சி எடுக்கும் இ.பி.எஸ்.,

Updated : ஏப் 12, 2019 | Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (48)
Advertisement
ஸ்டாலினை காய்ச்சி எடுக்கும் இ.பி.எஸ்.,

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி லோக்சபா தொகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள், விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பொள்ளாச்சியில் அவர் பேசுகையில், 'ஸ்டாலின் ஒரு பண்பில்லாத அரசியல்வாதி. ஒரு முதல்வராக இருப்பதால், கட்டுப்பாட்டுடன் பேச விரும்புகிறேன். ஸ்டாலின் கண்ணிய குறைவாக பேசினால், அதற்கு நாங்களும், பதிலடி கொடுப்போம். ஏனென்றால், ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எல்லை மீறினால், வரம்பு மீறினால், அதற்கு உண்டான பேச்சை அவர் வாங்கிக் கொள்வார்.



எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது' என்றார்.அடுத்து கோவைக்கு வந்ததும், இன்னும் காட்டம் கூடியது.'அனைவரையும் மதிக்கத் தெரிய வேண்டும். பிரதமரை கொச்சைப்படுத்தி பேசுவது, முதல்வரை கொச்சைப்படுத்தி பேசுவது, கூட்டணி கட்சித் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவது, ஒரு சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசி, அதை வைத்து அரசியலில் ஆதாயம் தேட முயற்சி செய்வது போன்றவை, மனிதப் பண்பு கிடையாது. குறைகளைச் சொல்லி, அதிலே ஆதாயம் தேடுகின்ற அரசியல்வாதிகளில் மிகத்தேர்ந்தவர் ஸ்டாலின்' என, கடுமையாக சாடினார். இதற்கு தொண்டர்கள் கைதட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஏப்-201916:08:52 IST Report Abuse
ரத்தினம் "கலைஞர் இடத்தில் " அவர் பேசாத பேச்சா? அவருடைய வழியில் தானே வாரிசுகளும் போவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
16-ஏப்-201914:18:15 IST Report Abuse
oce ஆதிக்கம் என்றால் பழமை. ஆதிக்கவாதிகள் யார். திராவிடமும் பழமையான ஆதிக்கம் தான். அதில் கடவுள் மறுப்பு சொல்லி காலம் கழிப்பவனும் ஆதிக்கவாதி தான். அடிமைகளும் வேண்டாம். இந்தியாவில் அடிமைத்தனம் உள்ளதா என்று கேட்டால் அதை சொல்பவனுக்கே தெரியாது. இப்படி தெரியாத வார்த்தைகளை வைத்து மக்களை திகைக்க செய்கிறார்கள். தமிழ் மானம் காப்போம். தமிழுக்கு மானம் உள்ளதா. எவன் சொன்னான். அனைத்து மொழிகளையும் அரவணைக்கும் திறமை பெற்ற தமிழை மானத்திற்குள் போட்டு மறைப்பது கேவலம். சுயமரியாதை என்பதற்கு அளவு கோல் எங்கே. அது எப்படிப்பட்ட அளவு கோல். யார் சுயமரியாதையை இழந்துள்ளனர். பட்டியலிடமுடியுமா. சமூக நீதி . அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா. பூணூல் அறுப்பது. வேட்டியை அவிழ்ப்பது. உச்சிக்குடுமியை கேலி பேசுவது கோயிலை இடிப்பேன் என்பது பிள்ளையாரை தெருவில் போட்டு உடைப்பது. மங்களம்மான நெற்றி பொட்டை வேண்டு மென்றே அழித்து நாத்திக விளம்பரம் செய்வது. திருமணமான பெண்களை வைக்கோல் போருக்குள் தள்ளிக்கொண்டுபோய் ஊராருக்கு மறைப்பது. தனது சகோதரர்களையே மதிக்க தெரியவில்லை. சகோதரத்துவம் என்றால் அது வெளியாருக்கா.இதெல்லாம் உதய சூரியனுக்கு வாக்களிப்போருக்கு தெரிய வேண்டுமா. . மக்களே சிந்தியுங்கள். .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஏப்-201916:26:37 IST Report Abuse
Endrum Indian ஆக மொத்தம் ஒருத்தன் கூட மக்களுக்கு சேவை செய்வதற்காக என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கின்றார்கள்??? எப்போ பார்த்தாலும் ஒண்ணு மோடி ஒழிக இல்லேன்னா ராகுல் ஒரு பப்பு ஸ்டாலின் ஒரு தண்டம் .....என்று தான் விதண்டாவாதமாக ஒருவரை பற்றி குறை சொல்வதே பொழப்பாய் போச்சி இவனுங்களுக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X