அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடக்கியே வாசிக்கும்அ.ம.மு.க., வேட்பாளர்!

Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
  அடக்கியே வாசிக்கும்அ.ம.மு.க., வேட்பாளர்!

பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க., சார்பில், முன்னாள், எம்.எல்.ஏ., ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவர், பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி முடித்தார்.அந்த கூட்டங்களில், அ.ம.மு.க., பூத் கமிட்டியில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஓட்டுகளை மட்டும் வாங்கினாலே, ஐந்து லட்சம் ஓட்டுகளில் வெற்றி பெற்று விடுவோம் என, நம்பிக் கொண்டிருந்தார்.ஆனால், பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட டோல்கேட்டில் மட்டும், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர், தினகரன், இவருக்காக பிரசாரம் செய்தார். இது தவிர, வேட்பாளர் ராஜசேகரன், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக தெரியவில்லை.தி.மு.க., கூட்டணி வேட்பாளர், பாரிவேந்தர், அ.தி.மு.க., வேட்பாளர், சிவபதி ஆகியோர், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், அவர்களுக்கு ஆதரவாக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், ஓட்டு சேகரித்து வருகின்றனர்.ஆனால், அ.ம.மு.க., வேட்பாளர் ராஜசேகரன் மட்டும், பிரசாரத்தில் தீவிரம் காட்டாமல் உள்ளார். 'ஆர்.கே., நகர் பார்முலாவை இங்கும் பயன்படுத்தி விடலாம் என்ற நினைப்பில் இருக்கிறாரா அல்லது ஆளும் கட்சி வேட்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கி வாசிக்கிறாரா' என, அ.ம.மு.க., தொண்டர்கள், சந்தேகம் எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஏப்-201915:24:59 IST Report Abuse
இந்தியன் kumar அம்மாமுக வாங்கும் வோட்டுக் கள் திமுகவைத்தான் பாதிக்கும் மோடிஜி பிரதமர் ஆக வேண்டும் நினைப்பவர்கள் ஒரு கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஏப்-201906:37:38 IST Report Abuse
Bhaskaran பாரிவேந்தர் நன்கு கவனித்திருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X