தி.மு.க., பட்டுவாடா பா.ஜ குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பட்டுவாடா பா.ஜ குற்றச்சாட்டு

Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (2)
 பட்டுவாடா , குற்றச்சாட்டு ,ஸ்டாலின்  ,பா.ஜ.க

சென்னை : ''தி.மு.க.,வினர் பண பட்டுவாடா செய்து, அதன் வழியே வெற்றி பெறலாம் என, நினைக்கின்றனர்,'' என, தமிழக பா.ஜ., மாநில செயலர், கே.டி.ராகவன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., பணப் பட்டுவாடா செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. துாத்துக்குடியில், மிக அதிகமாக பட்டுவாடா நடக்கிறது. தி.மு.க., பணத்தின் வழியே, வெற்றி பெற நினைக்கிறது. நேர்மையாக தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
தி.மு.க.,வினர் தேர்தல் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுகின்றனரா என, கவனிக்க வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், துாத்துக்குடியில் பிரசாரம் செய்தபோது, பா.ஜ., தலைவர், தமிழிசை போட்டியிடுவதை, தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பின், முதலாவதாக நடந்த, ஆர்.கே.நகர் தேர்தலில், தி.மு.க., டிபாசிட் இழந்தது. அதை மறந்துவிட்டு, ஸ்டாலின் பேசுகிறார்.
தமிழிசைக்குக்கு எதிராக, கட்சி சதி செய்துள்ளதாக பேசியுள்ளார். எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்கின்ற, முழு அதிகாரம் பெற்றவர், எங்கள் மாநில தலைவர். தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள், தி.மு.க., மீது மிகவும் கோபத்தில் உள்ளனர். கிருஷ்ணரை அவமானப்படுத்தி பேசிய, தி.க., தலைவர் வீரமணியை, இதுநாள் வரை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. இவ்வாறு, கே.டி.ராகவன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X