அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள், பா.ம.க.,வினர் எதிர்ப்பு திரும்பி சென்ற திருமாவளவன்

Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement
 பொதுமக்கள், பா.ம.க.,வினர் எதிர்ப்பு திரும்பி சென்ற திருமாவளவன்

பெரம்பலுார் : சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், வி.சி., தலைவர் திருமாவளவனை, ஊருக்குள் அனுமதிக்காமல் கிராம மக்கள் மற்றும், பா.ம.க.,வினர் திருப்பி அனுப்பினர்.சிதம்பரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், வி.சி., தலைவர் திருமாவளவன், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பலுார், குன்னம் சட்டசபை தொகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இரவு, 9:00 மணியளவில், ஒகளூர் கிராமத்துக்கு, திருமாவளவன் திறந்த ஜீப்பில் சென்றார். அப்போது, அவரது வாகனத்தை, பொதுமக்கள் மற்றும், பா.ம.க.,வினர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் மறித்தனர்.'எங்கள் ஊரில் உள்ள மயான கொட்டகையை, நாங்கள் புதிதாக கட்டும்போது, உங்கள் கட்சியை சேர்ந்த திராவிடமணிஎன்பவர், எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்துள்ளார்.இதனால், நீங்கள் எங்கள் தெருவுக்குள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது' எனக் கூறினர்.'இது பற்றி எனக்கு தெரியாது' என, திருமாவளவன் தெரிவித்தார்.
இருப்பினும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால், திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.மங்கலமேடு போலீசார் பேச்சு நடந்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன், திருமாவளவன், ஓட்டு கேட்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Viswanathan - Ratnagiri,இந்தியா
17-ஏப்-201912:16:14 IST Report Abuse
C Viswanathan Thanks to the media. Nowadays general public are and exposed to and is aware of all about politicians.Its a good symptom of an effective democracy.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
16-ஏப்-201907:27:46 IST Report Abuse
Sukumaran Sankaran Nair உலகம் பிறந்தது மனிதனுக்காக அந்த மனிதனின் உள்ளம் ஆனந்தமடைவது அவனது ஆன்மாவை பொறுத்தே உள்ளது அரசியல் செல்வாக்கை இழப்பதை கற்றறிந்த அரசியல்வாதிக்கு ஏற்பட்டுவிட்டது வருத்தத்தை அளித்தாலும், உலகம் மாற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளதுவே,இதற்கான அடிப்படை காரணமாகும். அரசியல் அமைப்புக்கள்,கட்டமைப்புகளின் வலிமை சரிவு தொடர்ந்து நீடிப்பதானது அதனை சீரமைப்பு அமைப்பதில் இனி பயனில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
15-ஏப்-201917:14:16 IST Report Abuse
Mano மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது இனி யாரும் ஏமாற்ற முடியாது. பொய் சொல்லி வாக்கும் கேட்கமுடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X