எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தொட முடியாது!
ஜெயலலிதா இடத்தை யாராலும்...
பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த இடத்தில் இருந்து, வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?
அ.தி.மு.க.,விற்கு, அதன் வளர்ச்சிக்கு, அவர் ஆற்றிய அரும்பணிகள், செய்த தியாகங்கள் அளவிட முடியாதது. இந்த இயக்கத்தை பாழ்படுத்தி விட வேண்டும் என்ற, பல்வேறு கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, பலமுள்ள இயக்கமாக, ஆளுங்கட்சியாக நிலைநிறுத்தியிருக்கிறார். அவரது தியாகத்தை, மீண்டும் நினைவுபடுத்தி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியான, குறிப்பாக, 2011 முதல், அவர்கள் மறையும் வரையில் ஆற்றிய திட்டங்கள், அரும்பணிகள், தொலைநோக்கு அம்சங்களை, பிரசாரத்தில் குறிப்பிடுகிறேன்.மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகிற போது, அதை தடுத்து, பெற்று தந்த ஒரே அரசியல் இயக்க தலைவர், ஜெயலலிதா என்பதை மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறேன். அவர்கள் ஆர்வத்துடன் அதை கேட்டு வருவதால், இந்த தேர்தல் நேரத்தில், ஒரு எழுச்சியான நிலை உருவாகிஇருக்கிறது.

ஜெயலலிதா,பன்னீர்செல்வம்,சிறப்பு பேட்டி


உங்கள் பிரசாரத்திற்கு, மக்களிடம் வரவேற்பு உள்ளதா?
நன்றாகவே இருக்கிறது; ஜெயலலிதா ஆற்றிய அரும்பணிகள் காரணமாக, எங்கள் பிரசாரத்தை அதன் தொடர்ச்சியாக தான் பார்க்கின்றனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, கூட்டம் அதிகம் வருகிறதே?
தன் எழுச்சியாக வரும் கூட்டத்திற்கும், மற்றவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற கூட்டங்களுக்கும், வித்தியாசம் உண்டு. நாங்கள் செல்லுமிடங்களில், வழியில் இருக்கிற மக்கள் ஆர்வத்துடன், மகிழ்ச்சியுடன் காட்டுகிற ஆதரவை, எங்களால் உணர முடிகிறது.

உங்களுக்கு ஆதரவு அளித்த, ராஜ கண்ணப்பன் மற்றும் எம்.பி.,க்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லையே?
என் நோக்கம், ஒரு தனிப்பட்ட குடும்பத்திடம் கட்சியும், ஆட்சியும் இருக்க கூடாது என்பது தான். அதை எதிர்த்து தான், 'தர்மயுத்தம்' துவங்கினேன். அந்நிலையில், அவர்கள் ஆதரவு தந்தனர். இன்று இருக்கிற நிலையில், அவர்கள் சுயநலத்தை வெளிப்படையாக காட்டியிருக்கின்றனர்.

உங்களின் ஆதரவாளர்கள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டும், பேசாமல் இருப்பது ஏன்?
என் அரசியல் பயணத்தில், எனக்கென்று தனியாக ஒரு கோஷ்டியை உருவாக்கி கொண்டதில்லை. தலைமை எனக்கு என்ன கட்டளையிடுகிறதோ, அதை தான் செய்து

வந்திருக்கிறேன். என்னை பொருத்தவரையில் கட்சிக்கும், ஆட்சிக்கும் தான் தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டுமே ஒழிய, தனிப்பட்ட நபருக்குவிசுவாசம் காட்டுவது,சரியாக வராது. தகுதியும், திறமையும் இருந்தால், கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, வாய்ப்புகள் தானாக தேடி வரும்.
உங்கள் மகனுக்கு, 'சீட்' வழங்கியதும், உங்களை நம்பி வந்தவர்களை கைவிட்டதாக, குற்றச்சாட்டு உள்ளதே?
மகனாக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் தகுதியும், திறமையும் இருந்து, மக்கள் ஏற்று கொள்ளும் அளவிற்கு, அவர்கள் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க.,வில், உங்கள் மகன் உட்பட பலரின் வாரிசுகளுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வை பின்பற்றுகிறீர்களா?
தி.மு.க., வில் மட்டுமே வாரிசு அரசியல் என்ற நிலைமை இல்லை. அகில இந்திய அளவில், முன்னாள் பிரதமர், நேரு காலத்திலிருந்து வாரிசு அரசியல் இருந்து வந்திருக்கிறது. தகுதியுள்ளவர்கள் நிலைத்து நின்றிருக்கின்றனர்.

தேனி தொகுதியில் போட்டியிடும் உங்கள் மகனுக்காக, பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வருவது குறித்து?
பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அவர் தேனி தொகுதிக்கும் வருகிறார்.

முதல்வருக்கும், உங்களுக்கும் இடையே மோதல் உள்ளதா?
எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், அவர் என்னுடனும், நான் அவருடனும் கலந்து பேசி தான் முடிவு எடுக்கிறோம்.

ஜெயலலிதா இருந்த போதும் இரண்டாமிடம். இப்போதும் இரண்டாமிடம். முதலிடத்திற்கு வர முடியவில்லை என்ற வருத்தம் இல்லையா?முதலிடம், இரண்டாமிடம் என்பதெல்லாம் இல்லை. ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய தலைவர். 20 ஆண்டு காலம் அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்து, அவர் கட்டளையிடும் பணிகளை செய்து வந்திருக்கிறேன்.

அ.தி.மு.க., கூட்டணியை அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி மட்டுமே உருவாக்கினர். உங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்படுகிறது; அது உண்மையா?
ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல், எந்த பணியும் நடக்காது என்பது, அனைவருக்கும் தெரிந்ததே. எனக்கு தெரிந்து தான், எல்லா பணிகளும் நடக்கின்றன.

பா.ஜ.,வுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்காத நிலையில், நீங்கள் கூட்டணி அமைத்தது ஏன்? பா.ஜ., மிரட்டியதால், கூட்டணி என்பது உண்மையா?

Advertisement

இன்றைய அரசியல் சூழ்நிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - புதிய தமிழகம் மேலும் பல நல்ல இயக்கங்கள் இணைவது அவசியம் என, கருதினோம். பா.ஜ., மிரட்டியதாக கூறுவது தவறு.

உங்களை விட, இ.பி.எஸ்., சிறப்பாக செயல்படுகிறாரா?
அவர், முதல்வர் என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். நான், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இருவரும் இணைந்து தான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தி.மு.க., கூட்டணி பற்றி உங்கள் கருத்து?
தி.மு.க., கூட்டணி கடந்த காலங்களில், நாட்டை ஆண்டிருக்கிறது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி செய்திருக்கிறது. அவர்களது அரசுகளின் செயல்பாடுகள் நாட்டை பற்றியோ, நாட்டு மக்களை பற்றியோ கவலைப்பட்டதில்லை. கடந்த கால, காங்., - தி.மு.க., கூட்டணி அரசு, மத்தியில் இருந்த போது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகியும், அவர்களால் அரசாணை வழங்க முடியவில்லை.ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, அரசாணையாக வெளியிடப்பட்டது. இதுபோல, ஜீவாதார உரிமைகளை, ஜெயலலிதா காப்பாற்றி தந்திருக்கிறார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருக்கலாம் என, என்றாவது நினைத்ததுண்டா?
எனக்கு அந்த எண்ணம் இல்லை. எனக்கு முதல்வர் பதவி வழங்கிய போதே, வேண்டாம் என்று தான் கூறினேன்.

அ.ம.மு.க.,வை இணைக்க, முதல்வர் ரகசிய பேச்சு நடத்துவதாக கூறப்படுவது உண்மையா?
இல்லை.

சிறையிலிருந்து சசிகலா வந்தால், கட்சியில் ஏற்றுக் கொள்வீர்களா?
பின்னால் நடப்பதை, யாராலும் கணிக்க முடியாது. இறைவன் ஒருவனால் தான் கணிக்க முடியும்.

அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, எப்படி உள்ளது?
இதுவரை, 35 தொகுதிகளுக்கு மேல் சென்று, பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியான வரவேற்பு கிடைத்தது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Vettavalam,இந்தியா
12-ஏப்-201918:36:29 IST Report Abuse

Vinothஆமாம் அந்த அளவுக்கு சொத்து குவிப்பு பண்ணிருக்காங்க.....

Rate this:
12-ஏப்-201914:51:41 IST Report Abuse

Nepolian Sஅதனால்தான் அந்த கட்சி ... முடிந்துவிட்டது என்கிறோம் உங்களையெல்லாம் தலைமையாக ஏற்றுக்கொள்ள உங்கள் கட்சி உறுப்பினர்களே விரும்பவில்லை

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-ஏப்-201913:47:28 IST Report Abuse

PANDA PANDIஎங்களுக்கு தெரியும். இப்போ உங்களுக்கு இருக்கிற ஒரே பயம். எங்க வீர தாய் SMALL MUMMY.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X