ஸ்மிருதி கல்வி தகுதி என்ன? வேட்பு மனுவில் திடுக் தகவல்

Updated : ஏப் 12, 2019 | Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (168)
Advertisement
 ஸ்மிருதி  கல்வி தகுதி என்ன? வேட்பு மனுவில் திடுக் தகவல்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தாம் பட்டபடிப்பு படிக்கவில்லை என கூறியுள்ளார்

2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானி, 42 தனது வேட்புமனு தாக்கலில் 1996-ம் ஆண்டு டில்லி பல்கலையில் பட்டபடிப்பு முடித்தாக தவறான தகவல் கொடுத்ததாக வழக்கு தள்ளுபடியான நிலையில் டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கில் ஸ்மிருதியின் கல்வி சான்றிதழ் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.





இந்நிலையில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி தனது வேட்புமனுவில் தமக்கு ரூ. 4.71 கோடி சொத்து இருப்பதாகவும், பள்ளி படிப்பு முடித்திருப்பதாகவும், பட்டபடிப்பினை முடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை வேட்பு மனுவில் தவறான தகவல் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று ஸ்மிருதி தாக்கல் செய்த கல்வி தகுதி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
18-ஏப்-201917:49:35 IST Report Abuse
K.   Shanmugasundararaj பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் வரலாறே பொய் சொல்லுவது தான். ஸ்மிருதி ராணி படித்தாரா இல்லையா என்பதல்ல பிரச்னை. அவர் தனது கல்வி தகுதி பற்றி பொய்யாக உறுதிமொழி கொடுத்துள்ளார்.எனவே அவரை வாழ்நாள் முழுதும் தேர்தலில் நிற்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் அவர்கள் - பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் மீது நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகின்றனர் என்றால் லோயா என்ற நீதிபதி ஞாபகத்துக்கு வருகின்றார். அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை/எடுக்க முடியாது. இது தான் நிதர்சனம்./ உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201905:04:25 IST Report Abuse
Dr.C.S.Rangarajan கல்வியின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்படி சட்டமில்லாத போது, கல்வித்தகுதியை வாக்காளர்கள் தங்கள் பிராமண பத்திரத்தில் தெரிவித்திருப்பது பற்றி பேசுபவர்களை, ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை. ஏன் என்றால், சத்திய பிரமாணம், உண்மையான தகவல்கள் நிறைந்ததாக இல்லை என்பது மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் சத்திய பிரமாணம் செய்து தரும் ஆவணம் ஒரு சம்ப்ரதாயம்,என கருதுவதால், அதன் நம்பகத்தன்மையை ஆராய்வதில்லை.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201920:23:49 IST Report Abuse
K.Sugavanamபிரமாதம்.....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஏப்-201910:04:29 IST Report Abuse
D.Ambujavalli பழைய மனுவில் சொன்ன தகுதிக்கே இன்னும் தீர்ப்பு வந்த பாடில்லை இம்முறை மாற்றிப் போட்டதால் பழைய பொய் மெய்யாகிவிடுமா? தகுதி ஐந்தாம் வகுப்பாகவே இருக்கட்டும் அதை மறைத்து ஒருமுறை, மாற்றி ஒருமுறை சொல்வதுதான் இங்கு பிரசினையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X