அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்: ராகுல் பேச்சு

Updated : ஏப் 12, 2019 | Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (76)
Advertisement

கிருஷ்ணகிரி : தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் பேசினார்.


கிருஷ்ணகிரி தொகுதி காங்., வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், '' நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் 20 சதவீத ஏழைகளுக்கு 72 ஆயிரம் ரூபாய், அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவோம். அதற்கு 'நியாய்' திட்டம் என்று பெயரிட்டுள்ளோம். அப்பணம், குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நான் வறுமையின் மீது துல்லியத் தாக்குதல் நடத்துவேன்.



அந்தப் பணத்தைக்கொண்டு, ஏழை மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்கும்போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். சிறு,குறுந்தொழில் கூடங்கள் இயங்கத் தொடங்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், நாட்டின் பொருளாதாரம் வளரும். நரேந்திரமோடி பணமதிப்பிழப்பு மூலமும், 'கப்பர் சிங் டாக்ஸ்' போன்ற ஜி.எஸ்.டி., மூலம், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார். திருப்பூர் பனியன் தொழில், காஞ்சிபுரம் பட்டு உற்பத்தி போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்து திருப்பூர், காஞ்சிபுரம் தொழில்களுக்கு புத்துயிர் அளிப்போம். பொருளாதாரத்தை சீரமைப்போம்.



அம்பானி, அதானி, முகுல் சோக்ஸி போன்ற வெறும் 15 பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி. 10 ஆயிரம் கோடி, 15 ஆயிரம் கோடி என்று ஒவ்வொருவருக்கும் அள்ளித் தருகிறார். அப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகிறார்கள். ஆனால், ஏழை விவசாயிகள் சிறிய கடன்களைக்கூட கட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.



இதனால் தான் விவசாயிகள் ஆட்சி அரசாங்கம் குறித்து அச்சத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அந்த அச்சத்தை போக்கி இது நமது அரசு என்ற நேசப்பூர்வமான எண்ணத்தை ஏற்படுத்துவோம். விளைபொருட்களுக்கு நல்ல விலை தருவோம். விவசாயத்தின் முகத்தோற்றத்தை மாற்றி அமைப்போம். விவசாயத்திற்கு தனியான பட்ஜெட் தாக்கல் செய்வோம். இது வரலாற்றுத் திருப்புமுனையாக இருக்கும்.


பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சட்ட மன்றங்களில் மட்டுமின்றி, அரசாங்கத்தின் பதவிகளிலும் வழங்குவோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி, மக்களின் கூட்டணி. காங்கிரசும் தி.மு.க.,வும் சமூக நீதிக்கு போராடிய கட்சிகள். இந்தத் தேர்தல் வெற்றி மூலம், இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராவார்,'' என்று பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஏப்-201903:56:27 IST Report Abuse
meenakshisundaram நானும் நல்ல தேடிப்பாத்துட்டேன்,மேடையிலோ கூட்டத்திலோ 'மொழி பெயர்ப்பு 'திலகம் தங்க பாலு மிஸ்ஸிங்.
Rate this:
Share this comment
Cancel
நாடோடி - chennai,இந்தியா
13-ஏப்-201901:24:59 IST Report Abuse
நாடோடி அருமை அண்ணன் தங்கபாலு மொழி பெயர்க்க வில்லையா - வேறு யாரோ ஒருத்தர் பேபேரோட இருக்காரே
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
12-ஏப்-201918:52:57 IST Report Abuse
தமிழ்மைந்தன் ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்திருப்பார் ..என ஊழல்வாதி மகன் ஸ்டாலின் பேசியுள்ளார்............அட கருமமே எழுதி கொடுப்பவர்களும் மன நோயாளிகளா?.......என்ன எழவோ.....இதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை.....அட கருமமே......உங்க கூட கூட்டணி வைக்க புதியதலைமுறை பச்சமுத்து சரியான ஆள்தான்..............தமிழ் எனது உயிர் என்று சொன்ன தெலுங்கு ஊழல்கருனாநிதி தனது குடுப்பத்திலேயே கல்வியை ஏன் கொடுக்கவில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X