அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர் மோடி!

Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (36)
Advertisement
 ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தவர் மோடி!

''ஒருநாள் இரவு, 8:00 மணிக்கு, நாட்டின் பொருளாதாரத்தை மோடி அழித்தார். 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட, பண மதிப்பிழப்பு தவறு எனக் கூறியிருக்கும்,'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.காங்., தலைவர் ராகுல், நேற்று தமிழகத்தில், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில், காங்., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தார். கிருஷ்ணகிரி, சேலத்தில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் பேசியதாவது: துயரம் நீங்கும்பல்லாயிரக்கணக்கான மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், காங்., தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், 'நீட்' தேர்வை எதிர்த்து, உயிரை விட்ட அனிதா போன்றவர்களின் துயரம், மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக, அத்தேர்வை ரத்து செய்ய, மாநிலங்களே முடிவு செய்யலாம் என்பதை தெரிவித்தோம்.ஒருநாள் இரவு, 8:00 மணிக்கு, நாட்டின் பொருளாதாரத்தை மோடி அழித்தார். 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட, பண மதிப்பிழப்பு தவறு என, கூறியிருக்கும். ஆனால், மோடி யாரிடமும் கேட்க மாட்டார்.ஜி.எஸ்.டி., என்ற பெயரில், ஐந்து வகை வரி, அதிலும், 28 சதவீதம் விதிக்கப்பட்டது. கொள்ளைக்கார வரி விதிப்பை நீக்கி, ஒரே வரியாக, குறைந்தபட்சமாக மாற்றுவோம். மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, அம்பானிக்கு வழங்கியுள்ளார்.
அதை, நாங்கள், ஏழைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். தெருத், தெருவாக, ஏழைகள் கணக்கெடுக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.இதுபோன்ற புரட்சிகர திட்டத்தை, எந்த நாடும் இதுவரை செயல்படுத்தியதில்லை.தொழில் தொடங்கும் இளைஞர்கள், மூன்றாண்டு களுக்கு, எந்த உரிமமும் பெற தேவையில்லை. தொழிலில் நிலை பெற்ற பின், அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். இந்தியாவில், 22 லட்சம் பணியிடங்கள், நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
புத்துயிர் பெறும்இவற்றை நிரப்ப, மோடி அரசு தவறி விட்டது. காங்., ஆட்சிக்கு வந்தால், இவையனைத்தும் நிரப்பப்படும். கிராமங்களில், 10 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப் படும். திருப்பூர், ஜவுளி தொழில் நகரம் ஆகும். இன்று, ஜி.எஸ்.டி.,யால் அந்த நகரமே முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, பட்டு தலைநகரமான காஞ்சிபுரம், தொழில் துறையில் முடங்கி கிடக்கிறது.
காங்., ஆட்சிக்கு வந்தவுடன், திருப்பூர், காஞ்சிபுரம் தொழில் துறையில், மீண்டும் புத்துயிர் பெறும். அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.தமிழக மக்களுக்கு, அரசியலை தாண்டி, எங்கள் குடும்பத்தின் மீது அன்பு உண்டு. அதே அன்பை என் மீதும் காட்டுவர் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஏப்-201920:18:37 IST Report Abuse
r.sundaram தலைப்பில் ஒரே ஒரு மாற்றம், நாட்டின் என்பதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின், மற்றும் பானா சீனாவின் என்று திருத்தி வாசிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
13-ஏப்-201919:18:00 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி ஒரே இரவில் கருப்பு பணத்தை அழித்தவர் மோடி. அப்படி சொல்லிப்பாரு பப்பு..
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
13-ஏப்-201920:08:46 IST Report Abuse
வந்தியதேவன்யாரோட கறுப்பு பணம்... உங்களோடதா... சொல்லவே இல்ல...?...
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
13-ஏப்-201918:03:15 IST Report Abuse
Tamilselvan காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை மீண்டும் தொடங்கி,மக்களின் பல லட்சம் கோடி பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி கூற வேண்டும். அப்படி மக்கள் பணத்தை மீட்டால், வறுமை கோட்டின் கீழ் உள்ளவருக்கு ஆண்டுக்கு 72000 ரூபாய் எளிதில் கொடுக்கலாம்.இதை எல்லாம் செய்ய உறுதி கூறினால்,காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X