ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Added : ஏப் 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : காங்., தலைவர் ராகுல் மீது, உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, பா.ஜ., - எம்.பி., மீனாட்சி லேகி தொடர்ந்துள்ளார்.புதுடில்லி லோக்சபா தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர், மீனாட்சி லேகி. உச்ச நீதிமன்றத்தில், இவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.இது பற்றி, கருத்து தெரிவித்த, காங்., தலைவர் ராகுல், 'பிரதமர் மோடி, கொள்ளையடித்திருப்பது உறுதியாகி விட்டது.
காவலாளியை திருடன் என, உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது' என்றார். உச்ச நீதிமன்றம், தன் உத்தரவில், எந்த இடத்திலும், பிரதமர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.இதன் மூலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மாற்ற, ராகுல் முயற்சித்துள்ளார். அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.இந்த மனு தொடர்பாக, வரும், 15ல் விசாரணை நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஏப்-201909:05:06 IST Report Abuse
Srinivasan Kannaiya எது செயதாலும் மகேசன் தான் பொறுப்பு
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஏப்-201909:04:34 IST Report Abuse
Srinivasan Kannaiya உச்ச நீதிமன்றம், தன் உத்தரவில், எந்த இடத்திலும், பிரதமர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இதை வேற தனியா சொல்லுவாங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X