பதிவு செய்த நாள் :
பொன் மாணிக்கவேல்,விவகாரம்,சுப்ரீம் கோர்ட்,தமிழக அரசு,குட்டு!

புதுடில்லி: சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் காணாமல் போன கோவில் சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார். அவரை ரயில்வே ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது.

தனிப்படை:


இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சிலை கடத்தல்தடுப்புபிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இந்நிலையில் 'சிலை கடத்தல் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்யப்பட்ட வழக்குகளை மட்டும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரிப்பர். மற்ற வழக்குகளும் எதிர்காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகின்றன' என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்தனர். மேலும் பொன் மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்ற அதே நாளில் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஒரு ஆண்டுக்கு பணி நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சர்வதேச தொடர்பு:


இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. விசாரணையின் போது 'சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

ரத்து:


சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு படையினர் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போக எதிர்காலத்திலும் அவர் பணியிலிருக்கும் காலகட்டத்தில் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை சிலை கடத்தல் தொடர்பான புதிய வழக்குகளையும் விசாரிக்கலாம். அதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் இது போன்ற வழக்குகளை கொடுத்து விசாரிப்பதற்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன. இவர் இந்த பணியிலிருக்கும் காலத்தில் ஓய்வூதியம் போக சிறப்பு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு இந்த அமர்வு உத்தரவிடுகிறது. அவருக்கு ஏற்கனவே தரப்பட்ட சம்பளம் இதர படிகளை எந்த காரணத் தாலும் பிடித்தம் செய்யவோ திரும்ப வசூலிக்கவோ கூடாது.

விசாரணை தொடர்பான தகவல்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய் குமார் சிங்கிடம் அவ்வப்போது பொன் மாணிக்கவேல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13-ஏப்-201921:59:26 IST Report Abuse

BoochiMarunthuவிசாரணை செய்த இவரை தூக்கி அடித்தது அதிமுக , இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்காம மௌனமா இருக்கு மத்திய அரசு . இதை தட்டி கேட்க முடியாத சொம்புகள் திமுகவை குறை கூறுகிறது .

Rate this:
Rajavel - Ariyalur,இந்தியா
13-ஏப்-201921:42:42 IST Report Abuse

Rajavelஅவாள்கள் துணை இல்லாமல் எப்படி ஸ்வாமி சிலைகள் கடத்தப்பட்டிருக்க முடியும். மற்றவர்கள் ஸ்வாமி சிலைகளை தொடவே முடியாதே.

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-ஏப்-201919:48:32 IST Report Abuse

jaganபுகார் குடுத்தது எல்லாமே "அவாள்" தான், இல்லை என்றால், விஷயம் வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. "அவாள்" வழக்கம் போல் நேர்மயாக நடந்ததன் பலன் தான் இது ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஏப்-201921:19:25 IST Report Abuse

Pugazh Vசாமி சிலைகளை பூஜிப்பது அர்ச்சகர் கள் அவர்கள் அறியாமல் கடத்தப்பட வாய்ப்பே இல்லை. 7 ஆண்டு களாக அதிமுக ஆட்சி. அதிமுகவைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட தி.மலரோ வாசகர்களோ எழுதாதது மட்டுமல்ல.. திமுகவை சம்பந்தமே இல்லாமல் இழுக்கிறார்கள். ஜாதிப்பாசம், கூட்டணிப்பாசம்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-ஏப்-201919:47:16 IST Report Abuse

jaganஅவுங்க புகார் குடுத்து தான் விஷயம் வெளியே வருது அவுங்களும் திரவிஷங்கள் போல் உள்கையாய் இருந்திருந்தால், எல்லாமே அமுக்க பட்டிருக்கும். ...

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X