பதிவு செய்த நாள் :
20 சதவீத கமிஷன் வாங்கும் கூட்டணி அரசு;
காங்.,--ம.ஜ.த., அரசை சாடிய மோடி

கொப்பால்: ''கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தபோது, 10 சதவீதம் கமிஷன் பெற்று வந்தனர். தற்போது கூட்டணி ஆட்சி இருப்பதால், காங்கிரஸ், ம.ஜ.த., தலா 10 சதவீதம் என, 20 சதவீத கமிஷன் அரசாக மாறியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, கொப்பாலில் நேற்று தெரிவித்தார்.

Congress,Modi,Narendra modi,காங்கிரஸ்,நரேந்திர மோடி,மோடி


லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் மோடி, நான்காவது முறையாக நேற்று, கர்நாடகத்துக்கு வந்தார். நேற்று மதியம் ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கொப்பால் மாவட்டம், கங்காவதியில் இறங்கினார்.

இங்கு பா.ஜ., பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்ற குரல் ஒலிக்கிறது.

2014ல் நான் பிரதமரானால், அரசியலிலிருந்து சன்னியாசம் பெறுவதாக, தேவகவுடா கூறியிருந்தார். நான் பிரதமரானேன். ஆனால், அவர் சன்னியாசி ஆகவில்லை. தேவகவுடா, சன்னியாசி ஆகாமல், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு தேர்தலில் டிக்கெட் பெற்று தருவதில் மூழ்கியுள்ளார்.

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தபோது, அக்கட்சியினர், 10 சதவீதம் கமிஷன் பெற்று வந்தனர். தற்போது கூட்டணி ஆட்சி இருப்பதால், காங்கிரஸ், ம.ஜ.த., தலா 10 சதவீதம் என, 20 சதவீத கமிஷன் அரசாக மாறியுள்ளது. டில்லி துக்ளக் சாலையில் ஒரு முக்கியமான தலைவர் வீடு உள்ளது. அந்த தலைவர் சார்ந்த கட்சி, ஆட்சி அதிகாரம் இல்லாததால், ஐந்து ஆண்டுகளாக அவர் பரிதவித்தார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த சில நாட்களில், துக்ளக் சாலையிலுள்ள வீட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் செல்கிறது.

இரண்டு வேளை உணவுக்கு கூட கதியில்லாதவர்கள் தான், ராணுவத்தில் சேருவர் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதன் மூலம், நாட்டுக்காக எல்லையில் காக்கும் ராணுவத்தினரை அவமதித்துள்ளார். நாடு தான் முதன்மை என்று கூறுபவருக்கும், குடும்பம் தான்

Advertisement

முதன்மை என்று கூறுபவருக்குமிடையே தான் தேர்தல் நடக்கிறது. தங்க ஸ்பூனில் உணவு சாப்பிடுபவர்கள், மற்றவர் கஷ்டத்தை எப்படி புரிந்து கொள்வர்?

நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு ஓட்டும், மோடியின் கணக்கில் சேரும். மோடி, மோடி என்று மக்கள் காட்டும் அன்பு, டில்லியில் உள்ளவர்களின் துாக்கத்தை கெடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆரம்பத்திலும், முடிவிலும் கன்னடத்தில் பேசி வாக்காளர்களை கவர்ந்தார் மோடி. மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பெலகாவி, சிக்கோடி, பல்லாரி பா.ஜ., வேட்பாளர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D D - madurai,இந்தியா
14-ஏப்-201900:31:27 IST Report Abuse

D Dவிவசாயிகளை வயிற்றில் அடித்த நீங்கள் வேண்டாம் ? டெல்லி யில் 100 நாள் எங்கள் விவசாயிகளை பிச்சைக்காரன் போல அலையை வைத்தீர் , அதை நாங்கள் மறந்தால் , நாங்கள் உண்பது சாப்பாடு அல்ல .

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஏப்-201923:14:34 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இப்படிக்கு 45% கமிஷன் வாங்கும் கூட்டணி ..

Rate this:
13-ஏப்-201920:33:40 IST Report Abuse

ஆப்பு

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X