அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோடியை தோற்கடிப்பதே ஒரே நோக்கம்
காங்., தலைவர் ராகுல் சவால்

''மோடியை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம்,'' என தேனி, மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் பேசினார்.

Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி


லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர்கள் இளங்கோவன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் (மதுரை), சட்டசபை இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோரை ஆதரித்து ராகுல் பேசியதாவது: இத்தேர்தல் இரு பார்வைகளுக்கு இடையேயான யுத்தம். ஒன்று நாட்டு மக்களின் கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற காங்கிரசின் பார்வை. இன்னொன்று ஒரே ஒருவரின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் பார்வை.

நாக்பூரில் இருந்து:


தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். பா.ஜ., நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆளத் துடிக்கிறது. தமிழ் மக்கள் அன்பானவர்கள், விட்டுகொடுப்பவர்கள். அவர்களை புரிந்து அன்போடு நடத்தினால், எதையும் தர தயாராக இருப்பர். அவமரியாதை செய்தால், அவர்களிடம் எதையும் பெற முடியாது. தமிழர்களை, தமிழின் தொன்மையை பற்றி மோடிக்கு எதுவும் தெரியாது. தமிழக முதல்வரை தன் கைக்குள் வைத்திருப்பதால், மக்களையும் கைக்குள் கொண்டு வரலாம் என மோடி நினைக்கிறார். ஆனால் காங்., அப்படி கருதவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது.

'நீட்' தேர்வு:


தங்கள் மீது திணிக்கப்பட்ட 'நீட்' தேர்வு வேண்டாம் என தமிழக இளைஞர்கள் சொன்னதால், அவர்களை காங்., அங்கீகரித்தது. தேர்தல் அறிக்கையில் 'நீட்' தேர்வை திணிக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளது. அனைவருக்கும் நியாயம், சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு மோடி அநீதிகளைத்தான் இழைத்துள்ளார்.

'நியாய்' திட்டம்:


அவர் ஏழை மக்களின் பணத்தை பிடுங்கி தனக்கு வேண்டப்பட்ட சிலரிடம் கொடுத்துவிட்டார். நாங்களோ, ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் 'நியாய்' திட்டத்தை அறிவித்துள்ளோம். இதன் மூலம் 5 கோடி குடும்பம் பயன்பெறும். உலகின் எந்த அரசும் இப்புரட்சியை செய்யவில்லை. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., விதிப்பு மூலம் மக்கள் பாக்கெட்டில் இருந்து மோடி பணத்தை பறித்தார். ஆலைகள் மூடப்பட்டு பலர் வேலையை இழந்தனர். பொருளாதார இயந்திரத்தை மோடி முடக்கிவிட்டார். நாங்கள் அதை சீர்செய்ய உள்ளோம். தொழில்வளத்தை சிதைத்த ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைக்க உள்ளோம்.

மோடியால் ஐந்து ஆண்டில் 5 கோடி வேலைவாய்ப்புகளை இழந்தோம். மத்திய அரசில் 22 லட்சம் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றை பொறுப்பேற்ற உடன் நிரப்புவோம். உள்ளாட்சிகளில் புதிதாக 10 லட்சம் பணியிடங்களை உருவாக்குவோம். சட்டசபை, லோக்சபாவில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவோம். மத்திய அரசு பணியிடங்களில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவோம்.

சட்டத்திருத்தம்:


டில்லியில் தமிழக விவசாயிகள் போராடிய போது நான் கலந்து கொண்டேன். ஆனால் விவசாயிகளை மோடி சந்திக்கவில்லை. அவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. காங்., ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை, பயிர் சேதத்துக்கு இழப்பீடு போன்றவை முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

நவீன தொழில்நுட்பங்கள், பதப்படுத்தும் குடோன் போன்றவை கொண்டு வரப்படும். கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று திருப்பி தராத கோடீஸ்வரர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் 40 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளை மத்திய அரசு சிறையில் அடைக்கிறது. காங்., ஆட்சிக்கு வந்தவுடன் சட்டத்திருத்தம் செய்வோம். கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் மீது துன்புறுத்தல் இருக்காது. அவர்களை சிறையில் அடைக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில தலைவர் அழகிரி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினர். ராகுல் பேச்சை முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்தார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெயரை குறிப்பிடாத ராகுல்:


* பகல் 3:45 மணிக்கு சேலத்தில் இருந்து ராகுல் ெஹலிகாப்டரில் தேனி வந்தார். அவர் வந்த ெஹலிகாப்டர் தரையிறங்குவதற்கு முன் மைதானத்தை ஒரு முறை சுற்றி வலம் வந்தது. கூட்டம் கடவுள் வாழ்த்து பாடலுடன் துவங்கியது. ராகுல் வருவதற்கு முன் மேடை, மைதானத்தை மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனையிட்டனர்.

* வேட்பாளர் இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தி.மு.க., துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் எம்.பி., ஆருண் பேசினர். மேலிட பார்வையாளர் முகுல்வாஸ்னிக், மாநில தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

* கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. ராகுல் பேச துவங்கியதும் ஓரளவு கூட்டம் வந்து சேர்ந்தது.

* பேசியவர்களை சுருக்கமாக பேசி அமரும்படி ராகுல் கைகடிகாரத்தை சுட்டிகாட்டி இளங்கோவனிடம் கூறினார்.

* கூட்டத்தில் வந்திருந்தவர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யாததால் கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து வந்த சில தொண்டர்கள் 'மாநில தலைவர் அழகிரி ஒழிக 'போன்ற கோஷங்களை எழுப்பினர்.

* தென் மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், திண்டுக்கல் டி.ஐ.ஜி., நிர்மல் குமார் ஜோஷி, கோவை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுகாம், சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி., ஸ்டாலின், தேனி எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என உள்ளிட்ட 940 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* பத்திரிக்கையாளர்களுக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் பாட்டில்களை சில காங்., நிர்வாகிகள் எடுக்க முயன்றனர். மேலும் குடிநீர் பாட்டில்களை கொடுக்காத விழா ஏற்பட்டாளர்களை காங்., நிர்வாகிகள் கடிந்து கொண்டனர். இதில் பத்திரிகையாளர்களுக்கும், காங்., நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement* கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூன்று வர்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதை சரிபார்த்து போலீசார் அனுமதித்ததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் விரைவாக தொண்டர்களை அனுப்ப கோரி போலீசாரை மேடையில் இருந்தவர்கள் மைக்கில் கடிந்து கொண்டனர்.

* கூட்டத்தில் பங்கேற்றவர்களை உளவுத்துறையினர் கணக்கெடுத்ததுடன் நிருபர்களிடமும் கேட்டறிந்தனர்.

* மதுரையில் ராகுல் பங்கேற்ற பிரசார கூட்டம் மண்டேலாநகர் ரிங்ரோட்டில் நடந்தது. இப்பகுதி விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது. எனவே விருதுநகர் காங்., வேட்பாளருக்காக இக்கூட்டம் நடத்தப்பட்டாலும், கூட்டணியில் உள்ள மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனும் மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால் வேட்பாளர்களின் பெயரை குறிப்பிடும்போது, மேடையில் இருந்த மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), திருநாவுக்கரசர் (திருச்சி) ஆகியோரது பெயர்களையும், மேடையில் இல்லாத கார்த்தி (சிவகங்கை) பெயரையும் ராகுல் குறிப்பிட்டார். ஆனால் வெங்கடேசன் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

* காங்., தமிழக தலைவர் அழகிரி பேசி முடிக்கையில், உதய சூரியன், கை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரும் மார்க்சிஸ்ட் கட்சி சின்னத்தை குறிப்பிடவில்லை.

* நேற்று கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரையில் ராகுல் பேசினார். நான்கு இடத்திலும் அவரசு பேச்சு ஒரே மாதிரியாக இருந்தது. அனைத்து கூட்டங்களிலும் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம் என்று பேச தவறவில்லை.

* மதுரையிலும், தேனியிலும் ராகுலின் பேச்சை பீட்டர்அல்போன்ஸ் மொழி பெயர்த்தார்.

* மதுரை கூட்டத்தில் தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.

* இருநாட்களுக்கு முன் உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது முகத்தில் பச்சசை நிறை லேசர் ஒளி ஏழு முறை பளிச்சிட்டது. 'துப்பாக்கி மூலம் அவர் குறிவைக்கப்பட்டாரா' என கட்சியினர் சந்தேகம் எழுப்பினர். பின் இது நிருபர் ஒருவரின் அலைபேசியில் இருந்து வந்தது உறுதியானது. நேற்று மதுரை, தேனியில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரது பேனாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

* மாலை 6:55 மணிக்கு பேச துவங்கிய ராகுல் இரவு 7:23 க்கு முடித்தார்.

* அவர் பேசும் போது தமிழக காங்., பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மேடையில் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தார்.

-நமது நிருபர் குழு-


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - CHENNAI,இந்தியா
15-ஏப்-201916:03:16 IST Report Abuse

Siva Kumarமோடியை தோற்கடிப்பதே ஒரே நோக்கம் காங்., தலைவர் ராகுல் சவால். இதல்லாம் ஒரு நோக்கம் நாட்டை முன்னேற்ற என்ன வழி? இதனாலதான் நீ ஒளிஞ்சி போகப்போற . அனால் மோடிக்கு நாட்டை எப்படி முன்னேற்றலாம், எப்படி பாதுகாக்கலாம், வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார். ஜெய் ஹிந்த் vote for பிஜேபி

Rate this:
Magath - Chennai,இந்தியா
14-ஏப்-201917:59:36 IST Report Abuse

Magath60 வருஷமா செய்யல. இப்போ வந்தட்டாரு. ஏதாவது செஞ்சிருந்தா அத சொல்லி வோட்டு கேக்கலாம். பண்ணது பூரா நாட்டுக்கு துரோகம். பல லட்சம் கோடிகளை காப்பாற்ற காங்கிரஸ் கு ஆட்சி தேவை. அதற்காக பொய்யான​ பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

Rate this:
spr - chennai,இந்தியா
13-ஏப்-201919:33:48 IST Report Abuse

sprஇந்த நாட்டை எப்படி முன்னேற்றுவேன் மதிப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கி மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காமல் வருமானம் பெற என்ன செய்வேன் விவசாயிகளுக்கு குளிர்பதனக்கிடங்கு, பொருட்களை நாட்டின் பிற சந்தைகளுக்கு கொண்டு செல்ல ஏற்ற சாலை அமைப்பு குறைந்த கட்டணத்தில் பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வேக்கள் உதவுமா என்றெல்லாம் பேச மாட்டேன் என்சிறார்கள். திரு மோடியைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் செயலாற்றுப் போனாலும், கொள்ளையடித்தாலும் கூட நாம் எதுவும்கேட்கமுடியாது ஏனென்றால் அவர்களே தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் மோடியைத் தோற்கடிப்பது மட்டுமே குறிக்கோள் என்று அது ஒரு சிறு பகுதி மட்டுமே என்று கூட சொல்லவில்லையே உண்மையிலேயே இவர்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணினால் அப்படியல்லவா சொல்ல வேண்டும்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X