அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் உதயநிதிக்கு விஜய பிரபாகரன் பதிலடி

Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 நடிகர் உதயநிதிக்கு விஜய பிரபாகரன் பதிலடி



தென்சென்னை லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து, நடிகர் உதயநிதி பேசுகையில், 'இப்படி ஒரு அழகான வேட்பாளருக்கு ஓட்டளித்து, பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். அது நம் கடமையும் கூட' என்றார்.தன்னைப்பற்றி உதயநிதி கூறிய, 'அழகான' என்ற சொல், தமிழச்சியை சற்று நெகிழச் செய்தது.இது குறித்து, தமிழச்சியிடம் நிருபர்கள் கேட்டபோது, 'அவர் தமிழ் மீது பற்று கொண்டதால், தமிழ் அழகு என்ற அர்த்தத்தில் கூறியிருக்கலாம்' என்றார். அடுத்தடுத்து, தேர்தல் பிரசார கூட்டங்களில், உதயநிதி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருவது, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே, 'ஏம்பா ஒரு அர்த்தம் பொருத்தம் வேணாமா? அதற்காக இப்படியா பேசுறது?' என, முகம் சுளிக்க வைத்துள்ளது.
உதயநிதியோ, 'நான் மோடியை பார்த்து கேட்கிறேன். நீங்கள் இந்தியாவில் இருந்ததை காட்டிலும், வெளிநாட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து, உலகம் சுற்றப் புறப்பட்டு விடுகிறீர்கள்.'நாட்டு மக்கள் மீது, உங்களுக்கு துளியும் அக்கறை இல்லை. உங்களை மக்கள் வெறுத்து விட்டனர்' என, ஒரு பிடிபிடித்தார்.மோடியை தாக்கிப் பேசுவதை அறிந்த, அ.தி.மு.க., தலைமை சும்மா விடுமா என்ன! தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம், 'உதயநிதி ஸ்டாலினுக்கு தக்கப் பதிலடி கொடுக்க, உங்கள் மகன் விஜய பிரபாகரனை களத்தில் இறக்கி விட்டால் தான் சரியாக இருக்கும். இது, தேர்தல் களத்தை சூடாக்கும்' என, உசுப்பேற்றினர்.பிரேமலதா, மகன் விஜய பிரபாகரனுக்கு, 'அசைன்மென்ட்' கொடுத்து, பிரசாரத்திற்கு அனுப்பினார். 'இளம் கன்று பயமறியாது' என கூறுவதற்கு ஏற்ப, விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பேசிய விஜய பிரபாகரன், 'குடும்ப பிரச்னைகளையே தீர்க்க முடியாத ஸ்டாலின், மக்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பார். 'தி.மு.க., என்றாலே தில்லுமுல்லு கட்சி. 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எங்காவது ரவுடியிசம் உள்ளதா? இதே ஊரில் தான் ஸ்டாலின் அண்ணன் அழகிரி இருக்கிறார்.'இவர்கள் குடும்பத்துக்குள் எத்தனை பிரச்னைகள் இருக்கிறது. பிரியாணிக்காகவும், பியூட்டி பார்லரில் தகராறு செய்வது தான், தி.மு.க.,வினரின் கொள்கை' என, போட்டுத் தாக்கினார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
francis - chennai,இந்தியா
18-ஏப்-201915:33:17 IST Report Abuse
francis யார் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் இல்லை.. ஜெயலலிதாவின் சொத்து வழக்கில் ஆ தி மு க வினர் காலங்கள் முழுவதையும் அவரை மீது எடுப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.. அந்த குற்றவாளி ஜெயாவின் கட்சிக்கு ஆதரிக்கிறீயா உனக்கு மூளை இல்லையா.. நேற்று வந்த உனக்கு இவ்வளவு ஆகாது தம்பி... பிரபாகர்..
Rate this:
Share this comment
Cancel
Dalda - Varanasi,இந்தியா
17-ஏப்-201906:57:25 IST Report Abuse
Dalda உதய நிதியின் கேள்வி ஒன்றுக்காவது பதில் சொல்ல வில்லையே இதுலே பதிலடின்னு தலைப்பு
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
16-ஏப்-201918:52:21 IST Report Abuse
Somiah M சபாஷ் ..சரியான போட்டி ..தொடரட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X