அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கரை வேட்டி, 'காவலாளி'கள்!
பணத்தை பாதுகாக்க, 'பலே' ஏற்பாடு

தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர், தங்களை பின்தொடர்ந்து வருவதை கண்காணிக்கவும், தடுக்கவும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் கட்சி தொண்டர்களையே கேடயமாகவும், 'சவுகிதார்' என்ற, காவலாளிகளாகவும் பயன்படுத்துகின்றனர்.

கரை வேட்டி,காவலாளி,பணத்தை,பாதுகாக்க,பலே ஏற்பாடு


லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும், வருமான வரித்துறையினர், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரகசிய ஆலோசனை:


வரும், 18ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதற்கு, சில தினங்கள் மட்டுமே உள்ளன. இதனால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, ஆயத்தமாகி உள்ளனர். மேலும், ஓட்டுச்சாவடி மையங்களில், தங்கள் சார்பில் உட்காரப் போகும், முகவர்களை சந்தித்து, அவர்களுக்கும், பணம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, வேட்பாளர்கள், இரவில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு, பணப் பரிவர்த்தனையும் நடப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு, புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, புகாருக்கு உள்ளான வேட்பாளர்கள் நடமாட்டத்தை, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த விபரத்தை, வேட்பாளர்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் வாயிலாக தெரிந்து வைத்து உள்ளனர். இதையடுத்து, வேட்பாளர்கள், தங்கள் கட்சியை சேர்ந்த, நம்பிக்கைக்கு உரிய, 25, 30 தொண்டர்களை, தங்களின் பாதுகாவலர்களாக நியமித்துள்ளனர்.

அவர்கள், வேட்பாளர்கள் செல்லும் இடங்கள், கட்சியினரை சந்திக்கும் இடங்களில் இருந்து, சற்று தொலைவில் நின்று கொள்கின்றனர். அந்த இடங்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் வருவது போன்ற அறிகுறி தெரிய வந்தால், அந்த விபரத்தை, உடனே, மொபைல் போன் வாயிலாக, வேட்பாளர்களின் உதவியாளர்களிடம் தெரிவித்து, 'அலர்ட்' செய்கின்றனர்.

'எஸ்கேப்!'


மேலும், அதிகாரிகள், வேட்பாளர்கள் உள்ள இடத்திற்கு விரைந்து வருவதை தடுக்கும் வகையில், அவர்கள், வரும் வாகனங்கள் முன், சாதாரண மக்கள் போல, தங்களின் வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்துகின்றனர். அதோடு மட்டுமின்றி, அந்த இடத்திற்கு, தேர்தல் பணிமனையில் தங்கியுள்ள மற்றும் பிரசாரத்திற்கு வந்த தொண்டர்களை வரவழைத்து, கூட்டத்தை கூட்டி விடுகின்றனர். அங்கு வரும் கட்சியினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதற்குள், பாதுகாவலர்களாக நிற்கும் தொண்டர்கள், வேட்பாளர்கள் உள்ள கட்டடத்திற்கு சென்று, அங்குள்ள பணத்தை எடுத்து, தப்பி விடுகின்றனர்.

பணம் பத்திரமாக சென்றதும், வேட்பாளர்கள், வெளியில் வந்து, 'சோதனை செய்ய வந்த அதிகாரிகளை ஏன் தடுக்கிறீர்கள்; நாம் பணமா பதுக்கி உள்ளோம்; சோதனையிடட்டும்' என, எதுவும் தெரியாதது போல கூறுகின்றனர்.

கணக்கெடுப்பில் தி.மு.க.,:


இந்த சூழ்நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக, ஓட்டு சதவீத கணக்கெடுப்பை, தி.மு.க.,வினர் துவங்கி விட்டனர். லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், தி.மு.க., நேரடியாக போட்டியிடுகிறது. இதில், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க.,வுடன், ஆறு தொகுதிகளிலும், தே.மு.தி.க.,வுடன், இரண்டு தொகுதிகளிலும், தி.மு.க., மோதுகிறது. இந்த தொகுதிகளில், வெற்றியை எளிதாக அறுவடை செய்து விடலாம் என, தி.மு.க., தலைமை கணக்கு போடுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க., மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு என்பதில்,

Advertisement

இழுபறி நீடித்து வருகிறது. இது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே, அ.தி.மு.க.,வை போலவே, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்க, தி.மு.க., முடிவெடுத்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு தொகுதிகளிலும், ஓட்டு கணக்கெடுப்பை, தி.மு.க.,வினர் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தி.மு.க., போட்டியிடும், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில், ரகசிய கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இதற்காக, பூத் ஏஜன்டுகளை போல, வெளி தொகுதிகளை சேர்ந்த கட்சியினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒவ்வொரு வீடாக சென்று, 'யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என்று, நேரடியாக கேள்வி எழுப்புகின்றனர்.

'யாருக்கு ஓட்டு?'


தி.மு.க., என்று, பதிலளிக்கும் நபர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில், 'டிக்' செய்து கொள்கின்றனர். அ.தி.மு.க., மற்றும் இதர கட்சிகள் என்று கூறினால், அவர்களை தவிர்த்து விடுகின்றனர். யாருக்கு ஓட்டளிப்போம் என்பதை சொல்லாமல், மவுனம் காக்கும் நபர்கள் குறித்தும், 'டிக்' செய்து கொள்கின்றனர். இதை வைத்து, தி.மு.க.,விற்கு எத்தனை சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்பது கணக்கிடப்படுகிறது.

இதன் அடிப்படையில், தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பவர்களை திருப்திப்படுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் ஓட்டுகள் தேவைப்படும் பட்சத்தில், மவுனம் காத்த நபர்களையும், 'கவனிக்க'வுள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

-நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
13-ஏப்-201919:38:16 IST Report Abuse

தமிழ்மைந்தன் ஊழல் திமுக ஆட்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். பொது மக்களுக்கு உயிர் பயம் உண்டு. எனவே ஏப்ரல் 18 அன்று உங்கள் ஆயுதத்தை உபயோகியுங்கள். அநீதியை அழியுங்கள். நிம்மதியாய் வாழ முயலுங்கள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஏப்-201908:46:29 IST Report Abuse

Srinivasan Kannaiyaவீட்டுக்கு வீட்டு போகும் நபர்களை பிடியுங்கள் .............

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X