பதிவு செய்த நாள் :
மீண்டும் சிக்கலில் ஸ்மிருதி இரானி
பட்டதாரி விவகாரத்தில் சர்ச்சை

புதுடில்லி: 'பட்டதாரி என்றும், இல்லையென்றும், முரண்பாடான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்மிருதி இரானி,சிக்கல்,பட்டதாரி,சர்ச்சை


மத்திய ஜவுளி துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி, 2014 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது, அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தான், பட்டதாரி என, குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின், அவர், மத்திய அமைச்சரானதும், 'ஸ்மிருதி இரானி பட்டதாரியே அல்ல' என, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது; அதை, அவர்

மறுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அமேதி தொகுதியில், மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார்.

புயல்:


அதில், '1993ல், பள்ளி இறுதி படிப்பை முடித்து, 1994ல், டில்லி திறந்தநிலை பல்கலையில் சேர்ந்தேன்; ஆனால், பி.காம்., பட்டப் படிப்பை முடிக்கவில்லை' என, அவர் தெரிவித்துள்ளார். ஸ்மிருதி இரானியின் இந்த முரண்பட்ட பிரமாண பத்திரங்கள், அவருக்கு எதிராக மீண்டும் புயலை கிளப்பியுள்ளன.

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: ஸ்மிருதி இரானி, தன் அதிகாரித்தையும், செல்வாக்கையும் தவறாக பயன்படுத்தியுள்ளார். கடந்த தேர்தலில், பட்ட தாரி என, தெரிவித்த அவர், தற்போது, பட்டம் பெறவில்லை என்கிறார். இந்த பிரச்னையை, நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய போது, அவர் அதை மறுத்தார். இவ்வாறு தொடர்ந்து பொய் பேசி, போலி ஆவணங்களையும்,

Advertisement

உண்மைக்கு மாறான பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்த, ஸ்மிருதி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதியிழப்பு:


அவர் வேட்பு மனுவை நிராகரித்து, போட்டியிட முடியாதபடி, தகுதியிழப்பு செய்ய வேண்டும். அவர் பட்டதாரி அல்ல என்பது பிரச்னையில்லை. ஆனால், அவர் தொடர்ந்து நீதிமன்றங்களில் பொய் பேசி வந்துள்ளார். புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்மிருதிக்கு, தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (36+ 169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiru - Singapore,சிங்கப்பூர்
13-ஏப்-201919:03:34 IST Report Abuse

Thiruமுதலில் ராகுல் இந்தியன் என்பதற்கும், வேறு நாட்டு பிரஜை அல்ல என்பதற்கும் எதாவது சான்று அவரால் கொடுக்க முடியுமா...? வெளி நாட்டு ஆட்களெல்லாம் இங்கே வந்து மக்கள் பிரதிநிதியாக போட்டியிடும் அளவுக்கு நாம் தரந்தாழ்ந்து விட்டோம் என்பது மிக வேதனையான விஷயம்...

Rate this:
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
13-ஏப்-201919:36:24 IST Report Abuse

Rahim Ganiஇந்த பரபரப்பு எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்வி தான் தோன்றுகிறது ???...

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
13-ஏப்-201913:25:26 IST Report Abuse

THENNAVANராகுல் என்ன படித்தான் என சொல்லுங்க அதைப்போய் பாருங்க கேவலமான கூடடம் இந்த காங்கிரசு கூடடம்.

Rate this:
மூன்றாவது கண் - Chennai,இந்தியா
13-ஏப்-201914:15:02 IST Report Abuse

மூன்றாவது கண்அடுத்தவன் என்ன சாப்பிடானு கேள்வி எழுப்பதே....

Rate this:
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
13-ஏப்-201919:42:40 IST Report Abuse

Rahim Gani...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஏப்-201912:59:12 IST Report Abuse

Malick Raja

Rate this:
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
14-ஏப்-201909:19:59 IST Report Abuse

Rahim Ganiச்சே ரொம்ப ரொம்ப ஒர்ஸ்ட் ........

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X