டில்லியில் தனித்து போட்டி :புலம்புகிறது காங்கிரஸ்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (12)
Advertisement
டில்லியில் தனித்து போட்டி  :புலம்புகிறது காங்கிரஸ்

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியுடனான, கூட்டணி பேச்சு தோல்வியில் முடிந்ததால், டில்லியில் தனித்து போட்டியிடப் போவதாக, காங்கிரஸ் அறிவித்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும், அடுத்த மாதம், 12ல் தேர்தல் நடக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. அதனால், இம்முறை, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க, காங்., விரும்பியது.



இதற்கு சம்மதித்த ஆம் ஆத்மி, 'ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும், எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, காங்.,கை வலியுறுத்தியது; இதை, காங்., விரும்பவில்லை. இதனால், கூட்டணி தொடர்பான பேச்சில், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறிஏற்பட்டது.இந்நிலையில், டில்லி மாநில, காங்., பொறுப்பாளர், பி.சி.சாக்கோ, நேற்று கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சி, தன் நிலையை அடிக்கடி மாற்றியபடி உள்ளது. அதனால், டில்லியில், ஏழு தொகுதிகளிலும், காங்., தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலம், அரசியல் நிலை வேறுபடுகிறது. அதனால், மற்ற மாநிலங்களில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி என்பதை ஏற்க முடியாது.

டில்லியில், ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், விரைவில் அறிவிக்கப்படுவர். ஆம் ஆத்மி சம்மதித்தால், தற்போது கூட, கூட்டணி அமைக்க, காங்., தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.டில்லியில், ஏழு தொகுதி களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும், ஆம் ஆத்மி துவக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
13-ஏப்-201916:57:44 IST Report Abuse
southindian நூறு வருஷம் ஆன கட்சி நேற்று உங்களை எதிர்த்து கட்சி தொடங்கிய கேஜரிவாளிடம் சரண்டர் ஆகி விட்டது . இது தான் ரா கா வின் தலைமை பண்பு . இவரா நாட்டையும் மக்களையும் காப்பாற்ற போகிறார்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்த காங்கிரஸ் கட்சியை நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட சீண்டவில்லை. பிறகு இவர்கள் எப்படி நாட்டை ஆள்வது.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
13-ஏப்-201912:16:56 IST Report Abuse
siriyaar தமிழ் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் வாழ்க கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஒழிக்க. கர்நாடகாவில் காவிரி ஆணையம் கலைக்கப்படும் தமிழ்நாட்டில் காவிரி ஆணையம் தொடரும். இவரெல்லாம் பிரதமராக வேண்டுமாம் சுடலை கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X