அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்டுவாடா எப்போது? : மக்கள் ஆர்வம்; கட்சிகள் கலக்கம்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (43)
Advertisement

மற்ற விஷயங்களில், எத்தனாவது இடத்தில் இருந்தாலும் சரி, ஓட்டு போட மக்களுக்கு பணம் கொடுப்பதில் தமிழகம்தான்,‛ 'டாப்' என்பதை, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒப்புக் கொள்கிறது.அந்த பெருமைக்கு பங்கம் வந்து விடுமோ என, அஞ்ச வைக்கிறது, தேர்தல் களத்தில் எழுந்துள்ள திடீர் முட்டுக் கட்டைகள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன், தலா ரூ. 6௦௦௦ கொடுக்கப்பட்டது. தினகரன் சார்பில், குக்கரும், அதற்குள் பணமும் கொடுக்கப்பட்டது. தி.மு.க., இரண்டாயிரத்துடன் நிறுத்திக் கொண்டது.
தமிழகத்தில் ஓட்டு பதிவுக்கு இன்னும், நான்கு நாட்களே இருக்கும் நிலையில், பட்டுவாடா எப்போது நடக்கும் என, மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.ஆளும் கட்சி, தங்கு தடையில்லாமல் பெட்டிகளை தமிழகம் முழுவதும் பக்குவமாக கொண்டு சேர்த்து விட்டது. கட்சியின் கிளை நிர்வாகிகள் மூலம், கவர்களை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது தான், இறுதிக் கட்டம்.
ஆனால், சரக்கு முழுமையாக கட்சியின் கீழ்மட்டம் வரை போய் சேரவில்லை என்பது, மேலிடத்துக்கு வந்திருக்கும் அதிர்ச்சி தகவல்.
இடைப்பட்ட நிலைகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் தங்களிடம் வந்து சேர்வதில் கணிசமான பகுதியை அமுக்கி விடுவதால், கீழ் மட்ட நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. 'கூரியர் வந்து சேரவில்லை' என, புகார் அனுப்புகின்றனர்.
அதே சமயம், முழுமையாக கைக்கு கிடைத்தவர்கள், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை சிரத்தையுடன் செய்து முடித்து விட்டனர். நான்கு வாக்காளர்கள் அடங்கிய, ஒரு வீட்டுக்கு, 2,௦௦௦ என இலக்கு நிர்ணயித்து பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
ஒரு பகுதிக்கு கொடுத்தும்; இன்னொரு பகுதிக்கு கொடுக்காமலும் விட்டால், கிடைக்காத வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி மீது கோபம் வந்து அது தேர்தலில் எதிரொலிக்கும் என, மேலிடம் கவலை அடைந்துள்ளது. அவசரமாக நிலைமையை சரி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர். 'புகாருக்கு இடமளித்தால் கட்சிப் பதவி பறிக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனாலும், இடைமட்ட நிர்வாகிகள் அசரவில்லை. காரணம், ஜெயலலிதா இப்போது இல்லை. அவர் இருந்தவரை, மேலிடத்தில் இருந்து வந்த, 'சரக்கு' யார் யாருக்கு எப்போது கொடுக்கப்பட்டது என்ற விபர பட்டியலை, அவர்கள் அனுப்பி வைத்தனர். வந்த பணத்தில் மிச்சம் இருந்தால், அதையும் அனுப்பி வைத்தனர். இப்படி செய்த பலருக்கு பாராட்டும், கட்சியில் பொறுப்பும் வழங்கினார் ஜெயலலிதா. மக்களுக்குக் கொடுக்காமல், நடுவில் சுருட்டியவர்களின் பதவி பறிக்கப்பட்டது. சிலர் மீது வழக்குகளும் பாய்ந்தன.
அந்த நிலை இப்போது இல்லை என்பதால், வந்தவரை லாபம் என பல நிர்வாகிகள் பதுக்குகின்றனர். இதனால் கூட்டணி கட்சிகளும் விழி பிதுங்கி நிற்கின்றன.எதிர்க்கட்சி நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. கொடுப்பதற்கு பணமும், மனமும் இருக்கிறது. ஆனால், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பணத்தை கொண்டு போக முடியவில்லை. பறக்கும் படை, மிரட்டும் துறை என எல்லோருமே, தி.மு.க.,வை குறி வைத்து பிடிக்கின்றனர். பொருளாளர் துரைமுருகன் வீட்டிலேயே, 'ரெய்டு' நடத்தியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. 'கரன்சி'யில் கை வைக்கவே, தி.மு.க.,வினர் நடுங்குகின்றனர்.
இதே பிரச்னை தினகரனின், அ.ம.மு.க.,வுக்கும் உள்ளது. இரு கட்சிகளும் தொண்டர்களை இதில் சம்பந்தப்படுத்தாமல், தனியார் ஏஜென்சி மூலம் பட்டுவாடாவை முடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திராவில் இந்த சேவையில் அனுபவம் பெற்றவர்கள் என்பதால், ஏஜென்சி நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கின்றனர்.
'கொடுத்து பழக்கி விட்டோம்; இப்போது கொடுக்க முடியாமல் போனால், மக்கள் சும்மா விடுவார்களா...' என்ற பீதி, பெரிய கட்சிகளிடம் தெரிகிறது. இதனால், தேர்தல் முடிவை கணிப்பது இன்னும் கடினமாகி விட்டது.--வி

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
15-ஏப்-201916:28:17 IST Report Abuse
sripa தமிழகம் இதில் முன்னோடியாக இருப்பது நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய ஒன்று. அனால் அப்பாவி மக்களையும் குறை கூற முடியாது. அவர்களின் நிலைமை அப்படி. எது இருந்தாலும் மக்கள் நன்றாக சிந்தித்து அவர்களின் வகை செலுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
13-ஏப்-201921:05:46 IST Report Abuse
தாமரை சற்று நேரத்துக்கு முன் ஒரு அப்பாவியிடம்(?) ஒட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதால் வரும் தீமை பற்றி ஒரு அரை மணி நேரம் நாக்கு வரள உபதேசித்தேன். அவரும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். அப்புறம் அப்பாவியாகக் கேட்கிறார் அந்த ஆசாமி நம்ம தொகுதிக்கு தினகரன் ஒண்ணும் குடுக்க மாட்டாராம்? இது அநியாயமில்லையா நீங்களே சொல்லுங்க என்றாரே பார்க்கலாம் ...
Rate this:
Share this comment
Cancel
Ramasubramanian Sk - pondicherry,இந்தியா
13-ஏப்-201917:56:51 IST Report Abuse
Ramasubramanian Sk Thamizhan ru sollada, thalai nimirndhu nillada
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X