அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றிபெறும்: ஓ.பி.எஸ். பேச்சு

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (13)
Advertisement
மோடி, வெற்றி, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி

தேனி : பிரதமர் மோடி , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''உலக நாடுகளால் புகழப்பட்ட பிரதமர் மோடியைப்போல் வேறு ஒருவர் இல்லை.

மோடியின் ஆட்சியில் இந்தியாவில் எங்கும் மதக்கலவரங்களே இல்லை. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பை பெற்றிருந்தார்கள். ஆனால், கடந்த 2004 முதல் 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மாறாக துரோகம் தான் செய்தார்கள்.

மோடி, இப்போது 60 ஆயிரம் கோடி ரூபாயில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. நமது கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலான கூட்டணி, தி.மு.க.,வின் கூடாநட்பு கூட்டணியை வேரோடு வீழ்த்தும்.

தமிழக மக்கள் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பார்கள். இந்திய அளவில், 350க்கும் மேற்பட்ட எம்.பி.,தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உறுதி. பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சியமைப்பார்,'' என்றார்.


தி.மு.க.,சந்தர்ப்பவாத கூட்டணி ; முதல்வர்


தேனி : பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ''எதிர்கால இந்தியாவை வழி நடத்திச் செல்லும் பிரதமர் மோடி. நாளைய தமிழ்ப்புத்தாண்டு மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கும் புத்தாண்டு. பிரதமராவதற்கு தகுதி வேண்டும்; திறன் வேண்டும் ; வலிமை வேண்டு. நாம் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று அறிவித்துள்ளோம்.

ஆனால்,தி.மு.க., தலைவர் மட்டும் தான் ராகுல் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். அவரது கூட்டணி கட்சிகள் எவையும் அறிவிக்கவில்லை. இங்கு காங், கம்யூ.., கட்சிகள் ஒருவருக்கொருவர் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால், கேரளாவில் எதிர்எதிராக போட்டி போடுகிறார்கள். அவர்களது கூட்டணி குழப்பக்கூட்டணி,சந்தர்ப்பவாத கூட்டணி. நான் ஸ்டாலினை கேட்கிறேன். நீங்கள் கேரளாவில் காங்கிரசை ஆதரிக்கிறீர்களா, கம்யூனிஸ்டை ஆதரிக்கிறீர்களா?

நமக்கு திறமையான பிரதமர், வலிமையான பிரதமர் கிடைக்க, நாடு பாதுகாப்பாக இருக்க, நாம் மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.தி.மு.க., 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இந்தியாவிற்கே, தமிழகத்திற்கே தலைக்குனிவு. அவர்களுக்கு ஊழலைப்பற்றி பேச தகுதியில்லை.

சாதாரண மக்கள் அம்மா அரசின் திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் பெருமையை துணிச்சலான நடவடிக்கையை எடுத்தவர். அவரது வெற்றிக்கு உழைக்கவேண்டும். மோடி பிரதமராக வேண்டும் என்று நாடே எதிர்பார்த்திருக்கிறது.
மேகதாதுவில் அணைகட்டவேண்டும் என்று கர்நாடகாவில் பேசியிருக்கிறார் ராகுல். அவர் பிரதமரானால் தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. எனவே, விவசாயிகள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

முல்லைப்பெரியாரில் 152 அடிக்கு தண்ணீர் உயர்த்தும் அனுமதி பெற்றவர் ஜெ.,. அதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது.ஆனால், நாங்கள் 152 அடியாக, நீர்மட்டத்தை உயர்த்தியே தீருவோம். 5 மாவட்ட மக்களும் பயன்பெற துணை நிற்கும். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
15-ஏப்-201919:10:12 IST Report Abuse
Tamil Selvan சரியான காமெடி..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-201908:26:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // 60 ஆயிரம் கோடி ரூபாயில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. //
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-201908:24:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொய்யான செய்திகளை பரப்ப கூடாதுன்னு முகநூல், வாட்ஸ் அப்பும் படாதபாடுபடுது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X