அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்று சேர்ந்த ஊழல் கூட்டணி: மோடி தாக்கு

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
தேனி: தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தமிழில் பேசி அவர் உரையை துவக்கினார்.பிரதமர் மோடி பேசியதாவது; இந்த மைதானத்தில் வெப்பமும், உங்கள் உற்சாகமும்

தேனி: தேனி மாவட்டம் கரிசல் விளக்கு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தமிழில் பேசி அவர் உரையை துவக்கினார்.latest tamil newsபிரதமர் மோடி பேசியதாவது; இந்த மைதானத்தில் வெப்பமும், உங்கள் உற்சாகமும் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான மக்கள் இங்கும், சாலைகளிலும் ஏாரளமானோர் திரண்டுள்ளனர். தமிழகம் ஒட்டுமொத்த குரலில் நாளை நமதே, 40ம் நமதே என கூறுவது தெரிகிறது. சுந்தர மகாலிங்கம் ஆசியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மண் துணிச்சலுக்கு பேர் போன பகுதி. ஏழைகளுக்காக பல நலத்திட்டங்கள் செய்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்தியாவின் பெரிய தலைவர்கள். அவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.


latest tamil news2014ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். இந்தியா தற்போது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து. இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை திமுக, காங்., ஏற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 2ஜி விவகாரத்தில் சிறை சென்றவர்கள் திமுக தலைவர்கள். அப்போது காங்.,ஐ கடுமையாக விமர்சித்தது திமுக. மக்களை தவறாக வழிநடத்த திமுக, காங்., முயற்சி செய்து வருகின்றன.

மோடியை தோற்கடிக்க ஊழலுக்கு ஆதரவானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். ராகுல், பிரதமர் என ஸ்டாலின் அறிவித்ததை ஒருவரும் ஏற்கவில்லை. மம்தா உள்ளிட்ட பலர் பிரதமராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை நிதியமைச்சராக இருந்த போது மகன் நாட்டை கொள்ளையடித்தார். ஏழைகளுக்கான நிதி ஆதாரத்தை அவர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.


வாரிசு அரசியல், குடும்ப அரசியல்latest tamil newsநாட்டு மக்களை யாரும் முட்டாள் ஆக்காமல் காவலாளியாக நான் இருக்கிறேன். மக்களை முட்டாள் ஆக்க நினைப்பவர்களை உங்களின் காவலனாக இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கை தமிழர்களின் வளத்திற்காகவும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களின் வளர்ச்சிக்கு திமுக-காங்., எதிரானவர்கள். ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி மீண்டும் உருவாக அனுமதிக்க மாட்டோம். சர்ஜிக்கல் ஸ்டிரைக், ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்பவர்களை எவ்வாறு கையாள போகிறோம் என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேச பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது.

பயங்கரவாதிகளை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர், பாக்.,கால் சிறைபிடிக்கப்பட்ட போது இந்திய அரசு துணிச்சலான நடவடிக்கை எடுத்து அவரை மீட்டது. ஆனால் அதையும் காங்., கேள்வி கேட்கிறது. நேர்மையற்றவர்களே காங்.,க்கு நண்பர்கள். பயங்கரவாத தாக்குதல் நடத்தும் போதெல்லாம் கடந்த 60 ஆண்டுகளாக ஏதும் செய்யாதவர்கள் இப்போது நியாயம் தருகிறோம் என்கிறார்கள்.
தேசிய பாததுகாப்பு விஷயத்தில் காங்., அரசியல் செய்கிறது. தெரியாமல் அவர்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள். டில்லியில் 1984 ல் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்கு நியாயம் வழங்குவார்களா. 1980 ல் எம்ஜிஆர் ஆட்சியை காங்., கலைத்தார்களே அதற்கு என்ன காரணம். அதற்கு நியாயம் வழங்குவார்களா. போபால் விஷவாயுவில் இறந்தார்களே அவர்களுக்கு நியாயம் வழங்குவார்களா.


வைகை ஆற்றை கங்கை நதிபோல்வளர்ச்சி பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீண்ட நாள் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேறும். மதுரை எய்ம்ஸ் மூலம் தேனி மாவட்ட மக்கள் பயனடைவார்கள். மத்திய அரசின் திட்டம் மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க நான் நினைக்கிறேன். விவசாயிகளுக்காக ஏதும் செய்யாதவர்கள் இந்த பகுதி விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொகுதி. இந்த மண்ணில் காங்., வேட்பாளர்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த மண்ணில் அவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லாததால் வெளி மாவட்டத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.
வரும் ஏப்.,18 அன்று தேசிய முற்போக்கு கூட்டணி- அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-201901:29:18 IST Report Abuse
Mani . V நாளுக்கு நாள் மோடியின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவர்கள் கூட்டணி உலகத்திலேயே யோக்கியமான கட்சிகளின் கூட்டணியாம்
Rate this:
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
13-ஏப்-201920:23:03 IST Report Abuse
தமிழ்மைந்தன் எது எப்படியோ இந்த ஊழல் திமுக கம்பெனி ஒழிந்தால் நாடு நலம்பெறும்....
Rate this:
Cancel
chails ahamad - doha,கத்தார்
13-ஏப்-201919:53:46 IST Report Abuse
chails ahamad தமிழர்கள் விபரமானவர்கள் மோடி சொல்லும் பொய்களை நம்பி விட ஏமாளிகள் அல்ல, சென்ற முறை வெகு இலகுவாக வடமாநிலங்களில் அவர்களின் கல்வியறிவற்ற தன்மைகளை பயன்படுத்தி , வாயால் வடை சுட்டு பாலாறும் , தேனாறும் ஓடும் என மதவாத உணர்வுகளை ஊட்டி , ஓட்டு பெற்று ஆட்சியில் அமர்ந்து தம்மை நம்பிய மக்களுக்கு போட்டது என்னவாம் என்பதை அந்த மக்களும் உணர்ந்தே தற்போது பா ஜ வுக்கே ஆப்படிக்க காத்துள்ளார்களாம் , ஊழலை பற்றி பேசுவதற்கும் தகுதிகள் வேண்டுமே , ரபேல் சம்பந்தமாக நீதிமன்றத்தில் தூசி தட்டப்பட்ட கோப்புகள் தோலுரிக்க போவதும் உறுதியாகுமே , நாடும் நமதே நாற்பதும் நமதே என்பதே திமுக வின் கோசமாம் அதுவே மக்களின் மனதில் மகிழ்ச்சியாம் நாற்பதும் வெற்றியே திமுக கூட்டணிக்காம் .
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201903:01:53 IST Report Abuse
Dr.C.S.Rangarajanமோடி பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டு புரிதலில்லாமையின் விளைவே. அவர் சொன்னதை எல்லாம் செய்துவிட்டார் என்பதல்ல வாதம். இப்பொழுது 'குறைந்த பட்ச மாத வருமானம்' என்ற வாக்குறுதி கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல்', ஐந்து வருட முடிவில் மூன்று லட்சத்து அறுபதினாயிரம் வங்கிக்கணக்கில் நேரிடையாக வரவு வைக்கப்படும் என மாறியதன் காரணமென்ன? மாதாமாதம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு 'குறைந்தபட்ச மாத வருமானத்தை' வங்கியில் செலுத்துவதாக இருந்தால், பல 'விலையில்லா சலுகைகள்' நடைமுறையில் இருப்பவைகளை வாபஸ் பெறவேண்டிவரும். எல்லா முந்தய சலுகைகளுடம் 'குறைந்த பட்ச மாத வருமான திட்டம்' செயல் படுத்த குறைந்தது 13 லட்சம் கோடி ருபாய் தேவைப்படும் என்பதால் 'குறைந்த மாத வருமான திட்டம்' தொடங்குவது தள்ளிப்போடப்படலாம். தள்ளிபோடப்பட்டால் அதுவும் ஒரு பொய் வாக்குறுதியாக கூட போகலாம். வாக்குறுதிகள் 'தாராள மயமாக்கப்பட்டது' காங்கிரஸ் தங்கள் தேர்தலில் வெற்றிபெறப்போவதில்லை என்பதால். ஏன் அவர்கள் வெற்றி பெற முடியாது என்றால், கூட்டணி பலம் பொருந்தியதாக அமைக்க படவில்லை. காங்கிரஸ் 48 மக்களவை அங்கத்தினர் என்ற நிலையிலிருந்து தனி பெரும்பான்மை பலம் பெறவேண்டும். பெறாவிட்டால், காங்கிரஸ் கூட்டாட்சி அமைத்தால், காங்கிரஸ் பிரதமராக வருவதில் இருக்கும் சிக்கலும்,'பிரிந்தவர் கூடியது' போல 'கூடியவர் பிரிவதும்' தவிர்க்கமுடியாமல் போகலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X