ராகுலின் எம்.பில்., டிகிரி : ஜெட்லி கேள்வி

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி : அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ, வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிதி இரானியின் கல்வி தகுதி குறித்து காங்., கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கு பதில் தாக்குதலாக காங்., தலைவர் ராகுலின் எம்.பில்., டிகிரி குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பி உள்ளார்.






ராகுல் டிரைனிட்டி கல்லூரி மாணவர் எனவும், அவர் 1995 ம் ஆண்டு மேம்பாட்டு கல்வி பாடத்தில் எம்.பில்., பட்டம் பெற்றவர் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலை., 2009 ம் ஆண்டு அறிவித்தது. இது குறித்து கேள்வி எழுப்பி உள்ள அருண் ஜெட்லி, பட்ட மேற்படிப்பு முடிக்காத ராகுல் எவ்வாறு எம்.பில்., டிகிரி முடித்தார் என கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்மிருதி இரானி தனது கல்வி தகுதி தொடர்பாக போலி ஆவணங்களை, வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளதாக காங்., விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.





பேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி பதிவிட்டுள்ள கருத்தில், ராகுலின் கல்வி தகுதி குறித்து பதில் கிடைக்காத பல கேள்விகள் பொது வெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ., வேட்பாளரின் கல்வி தகுதியில் கவனம் செலுத்துபவர்கள், ராகுலின் கல்வி தகுதி பற்றி கேட்கப்படும் கேள்விகளை கண்டு கொள்வதில்லை. அதற்கே அவர்கள் நிறைய பதிலளிக்க வேண்டும். அது அனைத்திற்கும் மேல் ராகுல் பட்டமேற்படிப்பு படிக்காமலேயே எம்.பில்., பட்டம் பெற்றுள்ளார்.





ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கடிதங்கள், கையெழுத்து இயக்கங்கள் எல்லாம் காங்.,ஆல் நடத்தப்படுபவை. மோடியின் செல்வாக்கை எதிர்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் பணிகள் எதையும் துவக்காத எதிர்க்கட்சிகள் இப்போது ரபேல் அல்லது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என தவறான தகவல்களை கூறி வருகின்றன. லோக்சபா தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நாடு முழுவதும் மோடி அலை பரவி உள்ளதை காட்டுகிறது. பல மாநிலங்களில் பொருந்தாத கூட்டணிகள் அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்தும் அது பா.ஜ., வுக்க சாதகமாகவே அமைந்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-ஏப்-201905:21:45 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நம்ம நாட்டின் சுதந்திரம் என்னத்துக்கு யூஸ் தெரியுமோ ?//அரைவேக்காடு அரசியல்வாதிகளின் உளறலை நம்பிண்டு (சோனியா படிக்கலே ராகுல் மக்கு பிளாஸ்திரி ) என்று தெரிஞ்சும் அதுகளை காங்கிரேஸ்லே தலைவி /தலைவன் ஆக்கிட்டு மதிப்பே போச்சு என்னிக்கும் சுதந்திரத்துக்கு உண்மையாபோராடினவாளையெல்லாம் மறந்த தலைவனுகளே காங்கிரஸ் லே அதிகம் இதுமறுக்கவேமுடியாத உண்மை . வல்லப பாதை படேல் நமது பீ எம் ஆயிருந்தால் நாம் நன்னாவே இருந்திருப்போம். தமிழ்நாடு நாசமாப்போனதுக்கே திமுக தான் காரணம் முக வெறும் சுயநலமே பிரதானம் என்று தன வமிசம்க்கே திமுகவை தந்துட்டாக அதிமுக ஊழலையா ஒழிக்கவே எம் ஜீ ஆர் ஆரம்பிச்சாங்க. இப்போது ஜெயாவின் சொத்தை மூலதனமா வச்சுண்டு பலகோடிகளுக்கு அதிபதியான வளம் வரானுக தினகரன் எம்பி ஏ படிச்சானாம் ஆனால் இதுலே எங்கே என்பது ரிஷிமூலம் சிங்கப்பூர் பிரஜை அவன் எப்படீங்க இங்கே சி எம் ஆர்வமுடியும் செய்வதெல்லாம் பிராடுகளேதான் சிரிப்பில் கள்ளம் பார்வையே கயமை இதுதான் லக்ஷணம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-201907:34:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேசாமே விட்டிருந்தா ரெண்டு நாளில் இதை மறந்திருப்போம். ஆனால் ஜெட்லீக்கு ஸ்மிருதி மேலே என்ன காண்டோ.. இதை கிண்டி, கிளறி விட்டு தள்ளி நின்னு வேடிக்கை பாக்குறார். இது இன்னும் பத்து நாள் ஓடும். பக்தால்ஸ் பொய் சொல்றது தப்பில்லைன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.. மத்திய அமைச்சர் ஆக இருந்தவர் தேர்தல் பிராமண பத்திரத்தில் பொய் சொல்(லியிருக்கி)றார். அதுக்கு வக்காலத்தா இன்னொரு மத்திய அமைச்சர் விரிஞ்சி கட்டிக்கிட்டு லூசு மாதிரி வர்றார்.. யோக்கியனுங்க நீங்க.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஏப்-201905:20:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //1995 ம் ஆண்டு மேம்பாட்டு கல்வி பாடத்தில் எம்.பில்., பட்டம் பெற்றவர் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலை., 2009 ம் ஆண்டு அறிவித்தது. // இவ்வளவு பெரிய நாட்டுக்கு அமைச்சன்னு சொல்லிக்கிறீங்க.. இந்த கேள்வியை கேம்பிரிட்ஜ் பல்கலையிடம் கேட்கலாமே. உண்மையா பொய்யான்னு? கூரை கூட இல்லாத டுபாக்கூர் யூனிவர்சிட்டிக்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்கி அதுக்கு ஊரான் பணத்தை ஆயிரம் கோடி சன்மானமும் வழங்கிய திருட்டு வள்ளல் கும்பலாச்சே நீங்க. அதை எப்பவாவது தப்புன்னு நினைச்சதுண்டா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X