ராகுலின் எம்.பில்., டிகிரி : ஜெட்லி கேள்வி| Dinamalar

ராகுலின் எம்.பில்., டிகிரி : ஜெட்லி கேள்வி

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (24)

புதுடில்லி : அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ, வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிதி இரானியின் கல்வி தகுதி குறித்து காங்., கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கு பதில் தாக்குதலாக காங்., தலைவர் ராகுலின் எம்.பில்., டிகிரி குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பி உள்ளார்.






ராகுல் டிரைனிட்டி கல்லூரி மாணவர் எனவும், அவர் 1995 ம் ஆண்டு மேம்பாட்டு கல்வி பாடத்தில் எம்.பில்., பட்டம் பெற்றவர் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலை., 2009 ம் ஆண்டு அறிவித்தது. இது குறித்து கேள்வி எழுப்பி உள்ள அருண் ஜெட்லி, பட்ட மேற்படிப்பு முடிக்காத ராகுல் எவ்வாறு எம்.பில்., டிகிரி முடித்தார் என கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்மிருதி இரானி தனது கல்வி தகுதி தொடர்பாக போலி ஆவணங்களை, வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளதாக காங்., விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.





பேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி பதிவிட்டுள்ள கருத்தில், ராகுலின் கல்வி தகுதி குறித்து பதில் கிடைக்காத பல கேள்விகள் பொது வெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ., வேட்பாளரின் கல்வி தகுதியில் கவனம் செலுத்துபவர்கள், ராகுலின் கல்வி தகுதி பற்றி கேட்கப்படும் கேள்விகளை கண்டு கொள்வதில்லை. அதற்கே அவர்கள் நிறைய பதிலளிக்க வேண்டும். அது அனைத்திற்கும் மேல் ராகுல் பட்டமேற்படிப்பு படிக்காமலேயே எம்.பில்., பட்டம் பெற்றுள்ளார்.





ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கடிதங்கள், கையெழுத்து இயக்கங்கள் எல்லாம் காங்.,ஆல் நடத்தப்படுபவை. மோடியின் செல்வாக்கை எதிர்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் பணிகள் எதையும் துவக்காத எதிர்க்கட்சிகள் இப்போது ரபேல் அல்லது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என தவறான தகவல்களை கூறி வருகின்றன. லோக்சபா தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நாடு முழுவதும் மோடி அலை பரவி உள்ளதை காட்டுகிறது. பல மாநிலங்களில் பொருந்தாத கூட்டணிகள் அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்தும் அது பா.ஜ., வுக்க சாதகமாகவே அமைந்துள்ளது என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X