ஓடிப்போனவர்களுக்கு பிடித்தது சனி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓடிப்போனவர்களுக்கு பிடித்தது சனி

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (2)
Share

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான, முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. மே, 19ம் தேதிக்குள் இன்னும், ஆறு கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள், மிகப்பெரும் ஆச்சர்யங்கள் அரங்கேற இருக்கின்றன. வங்கிகளில் கடன் வாங்கி, பல ஆயிரம் கோடிகளை கட்டாமல் நாட்டை விட்டு ஓடிய பெரும் தொழில் அதிபர்களை, இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வருவது, அதில் முக்கியமான ஒன்று.



latest tamil news




காங்கிரஸ் ஆட்சியின் போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், தொழில் அதிபர்களுக்கு எந்த ஆதாரங்களும் இன்றி கடன்கள் வாரி வழங்கப்பட்டன. இவ்வாறு கடன் வாங்கியவர்களில், 31 பேர் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். அவர்கள் இந்திய பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது மோடி, அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கிய உடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

இவர்களில், விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஜதின் மேத்தா ஆகிய நால்வரும் முக்கியமானவர்கள். லண்டனில் சிக்கியுள்ள மல்லையா, நிரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வர, அந்த ஊர் நீதிமன்றங்களில் இந்திய அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.,யும் போராடி வருகின்றன.


latest tamil news




கரீபியன் தீவுகளில் மெகுல் சோக்சியும், ஜதின் மேத்தாவும் தஞ்சம் புகுந்துள்ளனர். சோக்சியை நாடு கடத்த, ஆன்டிகுவா அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. மேத்தாவை கொண்டு வர, செயின்ட் கிட்ஸ் அரசு அதிகாரிகளுடன் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

சோக்சியும், மேத்தாவும், மிகப்பெரும் தொகையை செலுத்தி தான் அந்த நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே, செயின்ட் கிட்ஸ் தீவில், மேத்தா குடியுரிமையைப் பெற்று விட்டார். ஆன்டிகுவாவில் சோக்சி, சமீபத்தில் தான் குடியுரிமை பெற்றார். இந்த நாடுகளில் இருந்து, 132 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.


latest tamil news



பல நாடுகளில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் தொழில் அதிபர்கள் இது போன்ற குட்டி நாடுகள், தீவுகளில் பெருமளவு பணம் முதலீடு செய்து குடியுரிமை பெற்று விடுகின்றனர். இந்த நாடுகளுடன் குற்றவாளிகளை பரிமாறும் ஒப்பந்தம் எதுவும் இந்தியாவிற்கு இல்லை. எனவே, இவர்களை நாடு கடத்துவதும் பெரும் சிக்கல் தான். அதனால் தான், இந்தியாவில், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது போன்ற தீவுகள், சொர்க்கபுரியாக உள்ளன.

செயின்ட் லுாசியா தீவில், 7 கோடி ரூபாய் முதலீடு செய்து விட்டால், குடியுரிமை கிடைத்து விடும். மனைவிக்கும் குடியுரிமை வேண்டும் என்றால், முதலீட்டு தொகை இன்னும் அதிகமாகும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X