தமிழகத்தில் நிர்மலா பிரசாரம் செய்யாதது ஏன்?| Dinamalar

தமிழகத்தில் நிர்மலா பிரசாரம் செய்யாதது ஏன்?

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (55)

புதுடில்லி: தமிழகத்தில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்துகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரத்திற்கு வராதது ஏன் என்று தெரிய வந்துள்ளது.







தமிழகத்தை சேர்ந்தவர் நிர்மலா. பா.ஜ.,வில் செல்வாக்கான அமைச்சர் என கருதப்படுபவர். முதல்வர் பழனிசாமிக்கும் வேண்டப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெற்றும் பிரசாரத்திற்கு நிர்மலாவை அவரது கட்சியினர் அழைத்து வரவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.



பா.ஜ., கட்சியில் இருந்த கோஷ்டி பூசல் இதற்கு காரணமா?

டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகளை ஒருங்கிணைக்கும் பணி அவருக்கு தரப்பட்டுள்ளதா?

சில மாதங்களுக்கு முன்பு டில்லியில் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்காமல் புறக்கணித்தார் நிர்மலா. இதனால் நிர்மலாவை பிரசாரத்திற்கு கட்சி அனுப்பவில்லையா?






நிர்மலா கொஞ்சம் கெடுபிடியாக இருப்பதாலும் சாதாரண மக்களுடன் அவரால் ஒன்றிப் போக முடியவில்லை என்பது காரணமா?

இப்படி பல விஷயங்கள் அலசப்பட்டாலும் உண்மையான காரணம் யாருக்கும் தெரியவில்லை.




கட்சி மேலிட கருத்து



இது குறித்து பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறும்போது, நிர்மலா கட்சிக்கு கிடைத்த சொத்து. தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது நிர்மலா தான். எந்த சர்ச்சையான விஷயத்திற்கும் அரை மணி நேரத்தில் ஒரு விளக்கத்தை அவர் தயார் செய்யும் திறமை படைத்தவர். உலக வங்கி கூட்டத்திற்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் அமெரிக்காவுக்கு அருண் ஜெட்லி சென்றுள்ள இந்த நேரத்தில் டில்லியில் நிர்மலா இருக்க வேண்டும் என கட்சி கருதுகிறது. நிர்மலாவைப் பற்றி வதந்திகளை பரப்புவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றனர்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X