தேர்தல் ஆணையம் மீது சந்திரபாபு புகார்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: தேர்தல் ஆணையம் பிரதமர் அறிவுரைப்படி செயல்படுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு புகார் கூறியுள்ளார்.






நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஏப்.11) அன்று முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும், சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில், 66 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 78.8 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்தது. தேர்தல் அன்று 30 முதல் 40 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என புகார் கூறப்பட்டது. 150 ஓட்டுச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்துவேன் எனக்கூறியிருந்தார்.






இந்நிலையில், டில்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து தலைமை தேர்தல் ஆணையரை முதல்வர் சந்திரபாபு சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது ஏற்கனவே புகார் கூறியிருந்தோம். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால், பிரதமர் மோடியின் அறிவுரைப்படி செயலாற்றுகிறது. எங்களுடன் தேர்தல் ஆணையம் ஒத்துழைக்கவில்லை. ஆந்திராவில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது அநீதி. இவ்வாறு சந்திரபாபு கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
13-ஏப்-201920:40:46 IST Report Abuse
Agni Kunju இந்த டிராமா ஒரு முன்னெச்சரிக்கையான பல்டி... மேலும் அடுத்த கட்ட தேர்தலில் மோடிக்கு இடையூறு தர கூட்டு திட்ட சதி... யாரு மம்தா தந்த யோசனையா? நடத்து நாயுடு ... எப்படியும் அடுத்த சிம் மீரு லேது... கோவிந்தோ்கோவித்தோ...
Rate this:
Share this comment
Cancel
13-ஏப்-201918:41:05 IST Report Abuse
Arunachalam அடுத்த ஒரு மாதம் எல்லா வேலையும் விட்டு டில்லியில் போராட்டம் நடத்தி மக்கள் சேவை செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
13-ஏப்-201917:44:56 IST Report Abuse
GMM தேர்தல் ஆணையம் மீது சில எதிர்க்கட்சிகள் வலுவற்ற புகார் அளித்து வருகின்றனர்.( INC )காங்கிரஸ் தேர்தல் ஆணையம் வலுவாக இருப்பதை விரும்பாது. அதிகாரம் ECI விடம். அமலாக்க பணி மாநில, மத்திய அரசு துறைகள். வாக்காளர், வேட்பாளர் குற்றங்கள் கண்காணிக்க, தண்டிக்க அதிகாரம் ECI க்கு வேண்டும். தேர்தல் நீதிமன்ற வழக்குகள் விசாரணை முடிவு 90 நாட்கள். அதன்பின் தேர்தல் ஆணையம் முடிவு இறுதியானது. EVM கூடாது. அதிகாரிகள் இட மாற்றம் கூடாது. ஆட்சிக்கு வந்த நிலையில் வழக்கு போட்டு முடிவு செய்து இருக்கலாம். 18 வயது முதல் வாக்கு பதிவு. அதிக பட்ச வயது இல்லை. இடம் மாறுபவர் வாக்களிக்க எளிய வழி இல்லை. ஒரு கட்சி அங்கீகாரத்திற்கு வாக்காளர் 30% மேல் வேண்டும் என்ற நிலை இல்லை. ஆண்டு நன்கொடை அளவு எல்லை இல்லை. கட்சி பணம் மக்கள் பணம். தினசரி வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்கு இல்லை. கட்சியின் குறைகளை முதலில் சரி செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X