பிரியங்கா போட்டியிட வாய்ப்பு?

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து, அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆனால் டில்லி போன்ற சில மாநிலங்களுக்கு காங்., இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்கவில்லை. இந்நிலையில் வேட்பாளரை அறிவிக்காத ஏதாவது ஒரு தொகுதியில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





டில்லியில் ஆம்ஆத்மி.,யுடன் பலமுறை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் ஆம்ஆத்மி - காங்., கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படவில்லை. இதனால் வேறு வழியின்றி டில்லியில் தனித்து போட்டியிடும் முடிவுக்கு காங்., வந்துள்ளது. டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று (ஏப்.,13) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக டில்லி காங்., பொறுப்பாளர் சாக்கோ கூறி இருந்தார்.




இதற்கிடையில் கிழக்கு டில்லியில், டில்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித்தையே மீண்டும் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யோசித்து சொல்லி, அவகாசம் கேட்டுள்ளார் ஷீலா. இருந்தும் கிழக்கு டில்லியில் அவரை போட்டியிட வைக்க தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது. மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தானே தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஷீலா ஏற்கனவே கூறி இருந்தார்.




டில்லி முன்னாள் அமைச்சர் யோகானந்த்நாத் சாஸ்திரி, மல்யுத்த வீரர் சுஷில் குமார், கபில் சிபல், அஜய் மக்கான் உள்ளிட்டோரையும் தேர்தலில் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதால் பிரியங்காவின் பெயரும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவர் உ.பி.,யில் சோனியாவின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட சோனியா மனுத்தாக்கல் செய்தார். இதனால் டில்லியில் பிரியங்கா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201908:29:22 IST Report Abuse
Srinivasan Kannaiya ப்ரியங்காவின் கணவர் கூட எங்காவது நிக்கலாமே...குடும்பத்தில் எல்லோருக்கும் தேர்தலில் நிக்கிறார்கள் என்று கின்னஸ்ஸில் இடம் பெறலாமே
Rate this:
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201907:55:20 IST Report Abuse
Mahesh அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது போட்டியிடும் இடத்தை பொறுத்தது... வாரணாசியில் போட்டியிட்டால் அவர் கங்கையின் புதல்வி, கேரளாவில் போட்டியிட்டால் அவர் கிரிஸ்துவர்... பொதுவாக மக்களை முட்டாள் என கருதும் பச்சோந்தி...
Rate this:
Share this comment
Cancel
14-ஏப்-201907:26:13 IST Report Abuse
karthik பப்புவுக்கு பேதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X