ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு: மடாதிபதிகள் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு: மடாதிபதிகள் வேண்டுகோள்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (108)

சென்னை: ஹிந்து மதத்தை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டுளிக்க வேண்டும் என, சைவ ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






சென்னையில் சைவ ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழம் பெரும் சமயமாக திகழ்ந்து கொண்டிருக்க கூடிய ஹிந்து சமயத்தை பற்றி இழித்தும், பழித்தும் பேசுபவர்களை கண்டிப்பதற்காகவே இங்கு இந்த துறவிகள் குழு கூடியிருக்கின்றோம். உலகத்தில் இருக்க கூடிய பெரும்பான்மை சமயங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால், இந்திய நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழகத்தில் மட்டும் தான் தொன்மை மிகுந்ததாக இருக்க கூடிய சமயத்தையும், தெய்வங்கள் பற்றியும், அருளாளர்கள் பற்றியும், நுால்கள் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள்.





இது ஹிந்து சமய மக்களிடத்திலேயே ஒரு கொதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. யாரேல்லாம் ஹிந்து சமயத்தை ஆதரிக்கிறார்களோ, யாரேல்லாம் ஹிந்து சமயத்தை போற்றுகீறார்களோ, அவர்களை மக்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X