பதிவு செய்த நாள் :
கலக்கம்!
கோஷ்டி பூசல், ஊழல் குற்றச்சாட்டால் மம்தா...
எச்சரிக்கை மணியடிக்கிறது பா.ஜ.,வின் வளர்ச்சி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தை ஆளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, கோஷ்டி பூசல், ஊழல் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ளதால், கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி கலக்கம் அடைந்துள்ளார்.

எச்சரிக்கை மணி,பா.ஜ.,வளர்ச்சி,மம்தா,கலக்கம்


மேற்கு வங்க மாநிலம், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது ஒரு காலம். 1977ல் துவங்கி, 2011 வரை, மாநிலத்தில் தொடர்ந்து, இடதுசாரி கூட்டணியே ஆட்சி செய்து வந்தது. 'இடதுசாரிகளை தோற்கடிக்க முடியாது' என, அனைவரும் நினைத்த போது, காங்கிரசிலிருந்து பிரிந்த மம்தா பானர்ஜி, 1998ல், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை துவக்கினார். கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. முதல்வராக, மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார்.

சந்தேகம்:


இதன்பின், மேற்கு வங்க மாநிலத்தில், இடது சாரி கட்சிகளின் ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தல், 2016ல் நடந்த

சட்டசபை தேர்தல்களில், திரிணமுல் கொடியே உயர பறந்தது. ஆனால், இப்போது நடந்து வரும் லோக்சபா தேர்தலில், திரிணமுல் கொடி, மீண்டும் உயர பறக்குமா என்பதில், பெரும் சந்தேகம் நிலவுகிறது. இடதுசாரிகள் ஆட்சியில், அராஜகம், வன்முறை, ஊழல் போன்ற வற்றை எதிர்த்து, கடுமையான போராட்டங்ளை நடத்தி தான், மக்கள் மனதில், மம்தா இடம் பிடித்தார். ஆனால், 'மம்தா ஆட்சியிலும், அராஜகம், வன்முறை, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன' என, திரிணமுல் தொண்டர்களே குற்றம் சாட்டுகின்றனர்.

'எந்த நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், திரிணமுல் கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது' என, மக்கள் புலம்புகின்றனர். அதேபோல், கட்சியில் கோஷ்டி பூசல்களும் பெரிய அளவில் தலை துாக்கியுள்ளன. சிறு கிராமத்தில் கூட, கோஷ்டியால், கட்சி பிரிந்து கிடக்கிறது.

உறுதி:


அதேநேரத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில், பா.ஜ., மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளும் திரிணமுல் கட்சிக்கு அடுத்த இடத்தில், தற்போது, பா.ஜ., தான் உள்ளது என, உறுதியாக கூறலாம். இடதுசாரிகளுக்கு எதிராக, திரிணமுல் காங்.,கை, மம்தா எப்படி வளர்த்தாரோ, அதே பாணியில், மாநிலத்தில், கட்சியை, பா.ஜ., வலுப்படுத்தியுள்ளது. அதனால், மேற்கு வங்கத்தில், இம்முறை லோக்சபா தேர்தல், திரிணமுல் காங்., - பா.ஜ., இடையிலான போட்டியாக மாறியுள்ளது.

Advertisement

23 எம்.பி.,க்கள் நிச்சயம்

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, முகுல் ராய் கூறியதாவது: இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதால் தான், திரிணமுல் கட்சியில் சேர்ந்தேன். மோசமான நிர்வாகத்தால் தான், இடதுசாரிகள் தோல்வியடைந்தனர். இப்போது, மம்தாவும், அதே மோசமான நிர்வாகத்தை தான் வழங்கி வருகிறார். ஆனால், வளர்ச்சியை முக்கிய நோக்கமாக வைத்து, பிரதமர் மோடி செயல்படுகிறார். இது, மேற்கு வங்க மக்களை கவர்ந்துள்ளது. அதனால் தான், பா.ஜ.,வில் இணைந்தேன். மாநிலத்தில் குறைந்தது, 23 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.


அமோக வெற்றி பெறுவோம்

திரிணமுல் கட்சியின் மூத்த தலைவர், தினேஷ் திரிவேதி கூறியதாவது: திரிணமுல் கட்சி மீது, மேற்கு வங்கத்தில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுவது, மாயை. முதல்வர் மம்தா மீது, மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும், மக்கள் செல்வாக்கு மிக்கவர்களை தான், வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். கடந்த தேர்தலைவிட, அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201903:52:34 IST Report Abuse

J.V. Iyerமேற்கு வங்கத்தில், இம்முறை லோக்சபா தேர்தல் முடிவில் பெரும் ஆச்சர்யம் காத்திருக்கிறது. பெரும்பான்மையான தொகுதிகளில், பா.ஜ., அமோக வெற்றி பெறும். தீதீயின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும் காலம் வந்துவிட்டது.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஏப்-201907:43:52 IST Report Abuse

Nallavan Nallavanபாஜக -வுக்கு இங்கே எட்டு இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை .....

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-201904:43:19 IST Report Abuse

meenakshisundaram

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X