பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிரடி!
ஓட்டுக்கு பணம் வாங்குவோர் மீது வழக்கு
தமிழக தேர்தல் அதிகாரி சாஹு உறுதி
பட்டுவாடாவை தடுத்து நிறுத்த முயற்சி

சென்னை: தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மட்டுமின்றி பணம் வாங்கும் வாக்காளர் மீதும் வழக்கு பதிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஓட்டுக்கு பணம் வாங்குவோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல்,ஓட்டு,பணம்,தண்டனை,அறிவிப்பு,தலைமை தேர்தல் அதிகாரி,சத்யபிரதா சாஹு


தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டி: வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். நேற்று முன்தினம் மட்டும் வாகன சோதனையில் 1.18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விருதுநகரில் 59 லட்சம் ரூபாய்; கோவையில் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 991 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 284.67 கோடி ரூபாய். இது தவிர 34.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள்; 37.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 7.81 கோடி ரூபாய். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ஓட்டு போடுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கும் வாக்காளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மாதிரி ஓட்டுச்சாவடி ஒன்று அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இதில் அனைத்து வசதிகளும் இருக்கும். வாக்காளர்கள் அமர இருக்கை வசதி வெயிலுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்படும். ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் பெண்களே நிர்வகிக்கக்கூடிய ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்படும். வசதி இருந்தால் கூடுதலாக மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். 7,225 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்படும், என்றார்.

பெண்களுக்கு முன்னுரிமை!

ஓட்டுச்சாவடிகளில் ஆண்கள், பெண்கள், தனித்தனி வரிசையில் நிற்பர். முதியோர், மாற்றுத் திறனாளிகள் வந்தால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண் வாக்காளர்கள் இருவர் ஓட்டளித்தால், ஒரு ஆண் வாக்காளர் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்.


Advertisement

தடையை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை:

'நாளை மறுநாள் மாலை 6:00 மணிக்கு பின் எவ்வித பிரசாரத்திலும் அரசியல் கட்சியினர் ஈடுபடக் கூடாது' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. எனவே ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரசாரம் நிறைவடைகிறது. அதாவது 16ம் தேதி மாலை 6:00 மணியுடன் பொதுக்கூட்டங்கள் பேரணிகள் வழியாக 'டிவி' போன்ற சாதனங்கள் வழியாக பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிரசாரம் நிறைவடைந்த பின் யாரும் பொதுக்கூட்டம் பேரணி போன்றவற்றை நடத்தவோ பங்கு பெறவோ உரையாற்றவோ கூடாது. திரைப்படங்கள் 'டிவி' மற்றும் ஊடகங்கள் வழியாகவும் தேர்தல் குறித்து காட்சிப்படுத்துதல் கூடாது. அதேபோல் 48 மணி நேரத்திற்கு முன் பொது மக்களை கவரும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க நிகழ்ச்சிகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. இவற்றை மீறும் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். சான்றளிப்பு பெறாத விளம்பரங்களை ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில் நாளிதழ்களில் வெளியிடக் கூடாது. பிரசாரம் நிறைவடைந்த பின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பேட்டியை தவிர்க்க வேண்டும். 'டிவி'க்களில் 16ம் தேதி மாலை வரை மட்டுமே விளம்பரங்கள் ஒளிபரப்பலாம். அதுவும் சான்று பெற்ற விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்பலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
14-ஏப்-201911:39:45 IST Report Abuse

Nesan என்ன தமாஷ் பண்ணுறீங்க?. தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் தேதி அறிவுக்கும் பொழுது என்னவா புத்திசாலித் தனமாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாருன்னு உலகமே பார்த்து எள்ளிநகை ஆடின. அப்படி பட்ட லஷ்சணத்தில் நீங்கள் எல்லாம் இருக்கும் பொழுது, எதோ கண்டடைப்புக்க, நாளை நீதிமன்றம் கேள்வி கேட்டா பதில் சொல்ல பதிவு செய்துகொண்டு இருக்கிறீர்கள். இதுவரை பணம்கொடுத்தவர்கள் மேலே என்ன நடவடிக்கை எடுத்து இருக்கீங்க? யாருமே ஒரு ரூபாய்க்குட வாக்காளர்க்கு கொடுக்கவில்லையா? நிருபர்கள் உயிரை பணயம் வைத்து எத்தோனையோ புகைப்படங்களை ஆதாரத்துடன் வெளியீட்டு இருக்கிறார்கள். அது எல்லாம் உங்க தைரியமற்ற, நேர்மையற்ற, ஒரவஞ்சனையான கண்களுக்கு தெரியவில்லையா?. என்னைக்கு அரசியல்வாதிகளின் லஞ்சகாசுகளில் அதிகாரிகளும் பங்கு போடுறீங்களோ அன்னைக்கே நாடு உருப்படாது, லஞ்சமாகும் நீங்களும் உருப்பட மாடீங்க. அதிகாரிகளையும் மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகள் சரியாய் கவனித்துவிடுகிறார்கள். அனைத்துமே உங்கள் வீடுதேடி வந்து கொடுத்து விடுகிறார்கள். அப்பறம் எப்படி உங்களால் ஷேசன் போன்றவர் மாதிரி நேர்மையாக உங்களால் வேலை செய்யமுடியும்.

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
14-ஏப்-201911:12:18 IST Report Abuse

Needhiyin Pakkam Nil தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க கடைசியாக இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்குறீங்க வாழ்த்துக்கள்....

Rate this:
Suresh - chennai,இந்தியா
14-ஏப்-201909:16:01 IST Report Abuse

Sureshஎங்கே, ஒத்தை ஆள் மீது, ஓட்டுக்கு பணம் வாங்கினான் என்று கேஸ் போட சொல்லுங்கள் பாப்போம். ஐ சேலஞ்ச். இதெல்லாம் டுபாகூர் தேர்தல் கமிஷனின் டுபாகூர் அறிவிப்பு. தட்ஸ் ஆல்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X