அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
dmk,தி.மு.க.,இடைத்தேர்தல்,வேட்பாளர்,அறிவிப்பு,முந்தியது,அவசரம் ஏன்?

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 40 தொகுதி வேட்பாளர் அறிவிப்பை போலவே அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கவுள்ள நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் முதல் கட்சியாக வெளியிட்டு தி.மு.க. முந்தியுள்ளது. சூலுார் தொகுதிக்கு விருப்ப மனு பெறாத நிலையிலும் வளர்பிறையை முன்னிட்டு அவசரமாக வேட்பாளர்கள் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் வழக்கு காரணமாக மதுரை மாவட்டம் - திருப்பரங்குன்றம் கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி துாத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கோவை மாவட்டம் - சூலுார் தொகுதி அ.தி.மு.க. - எம்.எல்.ஏ. கனகராஜ் திடீர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியானது.

இதற்கிடையில் ஏற்கனவே காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ல் ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதோடு சேர்த்து இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும்படி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின. அதை ஏற்று திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 19ம் தேதி தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 18ல் முடிவடைந்ததும்

இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலில் கவனம் செலுத்த அ.தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. ஆனால் தி.மு.க. மட்டும் மே 19 இடைத்தேர்தலை சந்திக்க இப்போதே ஆயத்தமாகி விட்டது. அதனால் தான் விருப்ப மனு வாங்காமலேயே வேட்பாளர் தேர்வில் தி.மு.க. தலைமை அவசரம் காட்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு வாங்குவது தி.மு.க.வின் வழக்கம். 18 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்தபோதே ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி,

திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு விட்டன. சூலுாருக்கு மட்டும் விருப்ப மனு வாங்கவில்லை.

அதற்கென தனியாக விருப்ப மனு வாங்கி நேரத்தை கடத்தாமல் அவசர அவசரமாக வேட்பாளர் பட்டியலை நேற்று தி.மு.க. வெளியிட்டது. அதற்கும் காரணம் உள்ளது. கடந்த 4ம் தேதி துவங்கிய அமாவாசையை தொடர்ந்து தற்போது வளர்பிறை நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை வளர்பிறை நாட்கள். அதற்குள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து விட வேண்டும் என்பதால் தான் மற்ற கட்சிகளை

எல்லாம் முந்தி முதல் கட்சியாக நான்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்விலும் அ.தி.மு.க.வுக்கு முன்பாக தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் விபரம்:


சூலுாரில் பொங்கலுார் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஒட்டப்பிடாரத்தில் சண்முகய்யா போட்டியிடுகின்றனர். இவர்களில் பொங்கலுார் பழனிசாமியும், செந்தில் பாலாஜியும் முன்னாள் அமைச்சர்கள். இதில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக இருந்த செந்தில் பாலாஜி தினகரன் அணிக்கு மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தவர். அதன் காரணமாக தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் அரவக்குறிச்சியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் தான் தி.மு.க.வில் இணைந்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளரான டாக்டர் சரவணன் ஏற்கனவே அங்கு போட்டியிட்டு தோற்றவர். அவரை எதிர்த்து வெற்றி பெற்ற அ.தி.மு.க. - எம்.எல்.ஏ. போஸ் இறந்து விட்டார். அதற்கு முன்பாகவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் 'போஸ் வெற்றி செல்லாது' என சமீபத்தில் தான் தீர்ப்பு கூறப்பட்டது. தனி தொகுதியான ஒட்டப்பிடாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள சண்முகய்யா கட்சியில் ஒன்றிய செயலராக உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
14-ஏப்-201921:18:56 IST Report Abuse

oceதிமுகவுக்கு மட்டும் சூரியடன் உதிப்பதில்லை. உலகிற்கே ஒளி விளக்காய் அவன் உதிக்கிறான். பொதுவாகல சூரியன் உதிக்கும் நேரத்தில் உலகம் முழுமையாக விழிப்பதில்லை. அது சோம்பேறிகளின் நேரம். அவர்கள் கழிவுகளை வயிற்றில் சுமக்கும் நேரம். சோம்பேறிகளுக்கு அது தான் சின்னம்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
14-ஏப்-201921:12:04 IST Report Abuse

oceகோகுலாஷ்டமியில் குலாம் காதரை நுழைக்காதீர் சென்னை சூரி.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
14-ஏப்-201921:10:15 IST Report Abuse

oceநாராயணனை மறந்தாலும் பரவாயில்லை. ஆனால் நாளையும் கோளையும் மறப்பாரை அது பழிவாங்கும்.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X