பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தீவிரம்!
பொய் செய்திகளை தடுக்க, 'பேஸ்புக்' நிறுவனம்...
சிறப்பு அலுவலகங்கள் அமைத்து கண்காணிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நேரத்தில், பொய் செய்திகள், வன்முறையை துாண்டும் பேச்சுகள் பரவுவதை தடுக்க, சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனம், தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; இதற்காக, அமெரிக்கா, சிங்கப்பூர், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், சிறப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொய் செய்தி,தடுக்க,பேஸ்புக்,தீவிரம்,சிறப்பு அலுவலகங்கள்,கண்காணிப்பு


'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களை, பொழுது போக்குக்கானவை என, கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'சமூக வலைதளங்களால் தான், அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது' என, உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சிறு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, சிறு அமைப்புகள் முதல், தேசிய கட்சிகள் வரை, சமூக வலைதளங்களை பெரும் சக்தியாகக் கருதுகின்றன.

அந்த பெரும் சக்தியில், போலி தகவல்கள் அதிகம் உலா வருவது தான், பெரும் பிரச்னையாக உள்ளது. தேர்தல் நேரங்களில், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள், அரசியல் கட்சிகளின் பிரசார பீரங்கிகளாகவே மாறி விடுகின்றன.

புகார்:


பல பொய் செய்திகள், தரக்குறைவான விமர்சனங்கள், வன்முறையை துாண்டும் பேச்சுகள் அதிகளவில் பதிவிடப்படுகின்றன; இவை, வாக்காளர்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நம் நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப, பொய் செய்திகள் பரவுவதை தடுக்க, பேஸ்புக் நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய பிரிவுக்கான நிர்வாக இயக்குனருமான, அஜித் மோகன் கூறியதாவது: இந்தியாவில் நேர்மையாக தேர்தல் நடக்க, பேஸ்புக் மற்றும் எங்கள் நிறுவனத்தின் சமூக வலைதள செயலிகள் அனைத்தும், தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

இந்திய தேர்தலில், பொய் தகவல்களை பரவுவதை தடுக்க, கடந்த, 18 மாதங்களாகவே தொடர்ந்து முயற்சித்து வந்தோம். இந்தியாவில், 30 கோடிக்கும் அதிகமானோர், பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். தேர்தலில், பொய் செய்திகள், வன்முறையை துாண்டும் பேச்சுகள், தரக்குறைவான விமர்சனங்கள், பேஸ்புக் மூலம் பரவுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, எங்கள் தலைமை அலுவலகத்தில், இதற்காக தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான, அயர்லாந்து

Advertisement

தலைநகர் டப்ளின் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் ஆகிய இடங்களில், கண்காணிப்பு அலுவலகங்கள் துவக்கப்பட்டுள்ளன.

ஆய்வு:


மூன்று இடங்களிலும், கம்ப்யூட்டர் நிபுணர்கள், பன்மொழி வித்தகர்கள் உடைய குழு பணியாற்றி வருகிறது. இந்திய மொழிகளில் பதிவிடும் தகவல்களை, உடனடியாக ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யும் வசதியும், இந்த மையங்களில் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட, எங்கள் நிறுவன செயலிகளில், இந்திய தேர்தல் தொடர்பான செய்திகள், பேச்சுகள் பதிவிடப்பட்டால், உடனடியாக, இந்த மையங்களில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்வர்; அது பொய் செய்தி, வன்முறையை துாண்டும் பேச்சு என தெரிந்தால், அவை நீக்கப்படும்.

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை, எங்களுக்கு கடும் சவால் காத்துள்ளது. இந்திய தேர்தலில், எங்களின் தலையீடு இல்லை என்ற பெயர் எடுக்கவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
14-ஏப்-201910:12:10 IST Report Abuse

Suriஇன்டர்நெட் சேவையை நிறுத்திவிட்டால், நாட்டில் 95 % பொய் செய்திகளையும், இட்டு கட்டி வெளியிடப்படும் செய்திகளையும் தடுத்துவிடலாம்.

Rate this:
Suresh - omaha,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201909:23:21 IST Report Abuse

Sureshநாமதான் எச்சரிக்கையா இருக்கணும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201909:10:43 IST Report Abuse

Srinivasan Kannaiyaபார்ப்போம் இவை எவ்வளவு நேர்மையாக இயங்குகிறது

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X