பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய  தேசிய திறனறித் தேர்வு வேலம்மாள் பள்ளி சாதனை

Added : ஏப் 14, 2019
Advertisement

மதுரை : தேசிய திறனறித் தேர்வில் வேலம்மாள் பள்ளிகளின் மாணவர்கள் 117 பேர் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.என்.சி.ஆர்.டி.இ., மூலம் பள்ளி மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் தேசிய திறனறித் தேர்வு (என்.டி.எஸ்.இ.,) ஆண்டுதோறும் இரண்டு நிலைகளில் நடத்தப்படும். லட்சம் பேர் எழுதும் இத்தேர்வில் 5000 பேர் தேர்ச்சியடைவர். அவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், அங்கீகாரமும் கிடைக்கும். இத் தேர்வு மாணவர்களின் உச்சபட்சக் கனவு.

இதில் தேர்ச்சி பெறுவது மிகக்கடினம் என்ற நிலை இருந்தது.மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், வேலம்மாள் பள்ளி பயிற்சியளித்தது. என்.டி.எஸ்.இ., 2019 தேர்வு முடிவு வெளியானது. மாநில அளவில் முதல் 5 இடங்களை வென்றவர்களில் 3 பேர் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.முதல் 20 பேரில் 9 பேர் இப்பள்ளி மாணவர்கள். கீர்த்திஸ்ரீ மாநில அளவில் முதல் நிலையும், வேலம்மாள் பள்ளிகளைச் சேர்ந்த 117 மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியும் பெற்றனர்.

மாணவர், பெற்றோர் கனவை நிறைவேற்றி, போட்டி, சவால்களை எதிர்கொள்ள முனைப்புடன் செயல்படுவதாக வேலம்மாள் கல்விக்குழும இயக்குனர் எம்.வி.எம். சசிக்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X