பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழ் புத்தாண்டா... சித்திரை திருநாளா?
கூட்டணி கட்சிகளுக்குள் முரண்பாடு

சென்னை: தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ள, அரசியல் கட்சி தலைவர்கள், கொள்கையில் முரண்பட்டிருப்பதால், தமிழ் புத்தாண்டை முடிவு செய்வதிலும் முரண்பட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டா,சித்திரை திருநாளா, கூட்டணி கட்சி,முரண்பாடு


திராவிட கட்சிகளான, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், எதிலும் முரண்பட்டு நிற்பது வழக்கம். அதேபோல, தமிழ் புத்தாண்டிலும் முரண்பட்டுள்ளன. சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. தி.மு.க., ஆட்சியில், அதை மாற்றி, தை மாதம் முதல் தேதியை, தமிழ் புத்தாண்டாக அறிவித்தனர்.

மீண்டும், 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதை, தி.மு.க.,வினர் ஏற்கவில்லை. அதேபோல, வேறு சில கட்சிகளும் ஏற்கவில்லை. தற்போது தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில், பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அந்த கட்சிகள் ஒன்றோடொன்று முரண்பட்டவை. எனினும், தேர்தல் வெற்றி கருதி, கூட்டணி அமைத்துள்ளன.

அக்கட்சி தலைவர்களுக்கு இடையிலான முரண்பாடு, தமிழ் புத்தாண்டிலும் எதிரொலித்துள்ளது. இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் என்ற அடிப்படையில், இ.பி.எஸ்., தனியாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவர்னரும் வாழ்த்து கூறியுள்ளார்.

சித்திரை முதல் நாளை, அரசு உத்தரவின்படி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் சூழலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள, பா.ம.க., அதை ஏற்கவில்லை. எனவே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'சித்திரை திருநாள் வாழ்த்து' என, குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 'தை முதல் நாளாம், உழவர் திருநாளை, தமிழ் புத்தாண்டாக, தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்க, சித்திரை திருநாள் வகை செய்யட்டும்' என, கூறியுள்ளார்.

தி.மு.க., சார்பில், எவ்வித வாழ்த்தும் தெரிவிக்கப்படவில்லை. தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்கிரஸ் மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், தன் வாழ்த்து செய்தியில், 'தமிழர்கள் அனைவரும், மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் அரசுகளுக்கு, பாடம் புகட்டுகிற வகையில்,

Advertisement

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க, தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தன் வாழ்த்து செய்தியில், 'சித்திரை திருநாள் வாழ்த்து' என்றே குறிப்பிட்டுள்ளார். அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர் தினகரன், 'தமிழ் புத்தாண்டு வாழ்த்து' எனறு குறிப்பிட்டுள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், 'ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மோடி செய்திருக்கிற, தமிழகத்திற்கான நல்ல திட்டங்களை ஏற்றெடுத்து, இனி வரும் காலத்தில், அதை அதிகப்படுத்தக்கூடிய முயற்சியில், அனைவரும் இறங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201909:23:16 IST Report Abuse

Matt Pதையோ, சித்திரையோ இரண்டுமே தமிழ் மாதங்கள் .உலகத்தில் எல்லா மொழிகளுமே 12 மாதங்களை தான் பயன்படுத்துகின்றன என்று தெரிகிறது. சித்திரை திருநாள் என்று சொல்லியாவது வாழ்த்து சொல்கிறார்களே என்று மகிழ்சி அடைந்து கொள்ள வேண்டியது தான். நமது மொழிக்கு கொடுக்கும் மரியாதையாக மொழி பிறந்த நாளை கொண்டாடுகிறோம். சித்திரை ஒன்றாம் நாள் தான் எல்லோருக்கும் தெரியும். பத்து நாள் கழிச்சு இன்று தமிழ் தேதி என்ன என்றால் யாருக்கும் தெரிவதில்லை. பஞ்சாங்கத்தை புரட்ட வேண்டியது தான் .இங்கிலீஷு தேதி கேட்டா உடனே சொல்லிவிடுவார்கள் .தமிழோடு இங்கிலீஷு பாதி புகுந்து தமிழ் மொழியே புதுசா பிறந்த வேற்று மொழி ஆகி விடுமோ என்ற நிலையில் தமிழ்நாடு ஆகி கொண்டிருக்கிறது . சித்திரை முதல் நாள் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல ...நடராசன் ராமநாதன் சொன்னதை போல ..ஆசிய நாட்டிலிருக்கும் லௌஸ் நாட்டிலிருந்து ஒருவர் சொன்னார் ...இன்றைக்கு எங்களுக்கும் புத்தாண்டு என்று .அப்போது தான் அதை தெரிந்து கொண்டேன் .

Rate this:
Sundar - Chennai,இந்தியா
14-ஏப்-201921:12:19 IST Report Abuse

Sundarஇந்து மதத்தையும் அதன் பழக்க வழக்கங்களையும் கொச்சை படுத்தும் திமுகவை அதன் கூட்டணி கட்சிகளையும் இந்த தேர்தலில் புறக்கணிப்போம்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஏப்-201919:54:37 IST Report Abuse

Natarajan Ramanathan...சுடலையை ஐந்து ஆண்டுகளாக பொத்திக்கொண்டு இருக்க வைத்ததே மோடியின் மிகப் பெரிய சாதனைதான். நாங்கள் தீயமுகவையும் அதன் ரௌடிகளையும் அடியோடு அழித்து விடுவோம்.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X