எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோவில்!
மாமல்லபுரத்தில், 300 ஏக்கரில், ரூ.100 கோடி செலவில்
தி.மு.க., சார்பில் வெங்கடாசலபதி கோவில்!

ஒரு நாள் காலை தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், நிருபருக்கு அளித்த பேட்டி:

300 ஏக்கர்,ரூ.100 கோடி,தி.மு.க.,வெங்கடாசலபதி,கோவில்


இதுநாள் வரை, ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வந்த நீங்கள், திடீரென நெற்றி பட்டையுடன், சிவ பக்தராக மாறி விட்டீர்களே?
என் தாத்தா முத்துவேல், ஒரு ஹிந்து; என் தந்தை, ஒரு ஹிந்து; நான் ஒரு ஹிந்து; என் மகன் உதயநிதி, ஒரு ஹிந்து; என் பேரன் ஹிந்து என்று, எங்கள் பரம்பரையே பிறந்தது, ஹிந்து மதத்தில் தான். நான் ஹிந்து கடவுளை வழிபட்டு, நெற்றியில் மூன்று பட்டை போட்டுள்ளது, ஹிந்து மதத்தை சார்ந்தவன் என்பதால் தான்.

ஹிந்து மதத்தை பற்றி, அவதுாறாக பேசி வந்த தாங்கள், தற்போது, ஹிந்து மதத்தை பின்பற்றுவது தேர்தலுக்காகவா?
இதற்கு முன், நான் ஹிந்து மதத்தை தரக்குறைவாக பேசியது, காலத்தின் கட்டாயம். அதை, தீய கனவாக எண்ணி, அனைத்தையும் மறந்து விட்டேன்...

உங்களது கல்வி சான்றிதழ், உங்கள் மகன், பேரன் கல்வி சான்றிதழ் அனைத்திலும், மதம் என்று கேட்கப்பட்ட இடத்தில், என்ன பூர்த்தி செய்து இருக்கிறீர்கள்?
உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்; நான் முன்னர் சொன்னது போல, நாங்கள் பிறவியிலேயே, ஹிந்து என்பதால், மதம் என்று கேட்கப்பட்ட இடத்தில், ஹிந்து என்று தான், கொட்டை எழுத்தில் பூர்த்தி செய்து இருக்கிறேன்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை ஒப்பிடும் போது, ஹிந்து மதத்தை பற்றிய, உங்கள் கருத்து என்ன?

கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்மதத்தில், எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். எனவே தான், கிறிஸ்துவர்களுக்கு, கிறிஸ்துமஸ் வாழ்த்தும்; முஸ்லிம்களுக்கு, ரம்ஜான் வாழ்த்தும் தெரிவிக்கிறேன்.

உங்கள் தந்தை கருணாநிதி, 'ஹிந்து என்றால் திருடன்' என்று பொருள் தெரிவித்தது பற்றி, உங்கள் கருத்து என்ன?
என் தந்தை, ஒரு எழுத்தாளர் என்பது, தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று. என் தந்தை, காவல் துறை பற்றி, ஒரு கட்டுரை எழுதி கொண்டு இருந்தார். அந்த கட்டுரையில், திருடன் என்ற, ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்த சமயத்தில், நிருபர்களை சந்தித்ததால், நாக்கு குழறி தவறுதலாக, ஹிந்து என்றால் திருடன் என்று, கூறி விட்டார். இதற்காக, தமிழகத்தில் உள்ள, ஐந்து கோடி ஹிந்து மதத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தி.க., தலைவர் வீரமணி பற்றி சொல்லுங்க...
வீரமணி, ஹிந்து மத கடவுள் கிருஷ்ணன் பற்றி, அவதுாறாக பேசியிருப்பது, தற்போது தான், என் கவனத்திற்கு வந்துள்ளது. என் குடும்பத்தினர், அன்றாடம் வழிபடும் கிருஷ்ணரை பற்றி, வீரமணியின் விமர்சனத்தை கடுமையாக கண்டிக்கிறேன். தி.க., உடன் எந்த ஒட்டும், உறவும் நிரந்தரமாக கிடையாது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், வீரமணியை பிரசாரத்திற்கு அழைக்க கூடாது என, தடை உத்தரவு போட உள்ளேன்.

ஹிந்து மதத்தினருக்காக, ஏதாவது சிறப்பு செய்வதாக, உங்கள் கட்சிக்கு எண்ணம் உள்ளதா?
தமிழக ஹிந்துக்கள் வழிபடுவதற்காக, மாமல்லபுரம் அருகில், 300 ஏக்கரில், 100 கோடி ரூபாய் செலவில், தி.மு.க., சார்பில், வெங்கடாசலபதி கோவில் கட்டப்படும். இதற்கான, முழு செலவையும், தி.மு.க., ஏற்கும். இது, தென் திருப்பதி என்று அழைக்கப்படும். ஆந்திராவில் உள்ள திருப்பதி போல், தென் திருப்பதியில், பக்தர்களுக்காக, எல்லா வசதிகளும் செய்யப்படும்.

முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களின், ஓட்டை பெற, நடிக்கின்றனர் என்பது பற்றி, உங்கள் கருத்து?

Advertisement

திருப்பதி ஏழுமலையான் அருளாளும், பழனி மற்றும் திருச்செந்துார் முருகன் ஆசியாலும், தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும்; 18 சட்டசபை இடைத்தேர்தலிலும், தி.மு.க., வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதனால், பதவி பறிபோய் விடும் என்ற பயத்தில், இ.பி.எஸ்.,சும், பன்னீர்செல்வமும் உளறுகின்றனர்.

நீங்கள் மதவாதியை போல் நடந்து கொள்வதால், கிறிஸ்துவர், முஸ்லிம்களிடம் இருந்து கிடைக்கும் ஓட்டுக்கள், உங்களுக்கு குறைய உள்ளதாக கூறுகின்றனரே?
எனக்கு, அதை பற்றி கவலையில்லை. ஏனெனில், என் உடன்பிறப்புகள், என் சொந்தக்காரர்கள் ஆகிய ஹிந்து மத மக்கள், ஐந்து கோடி பேர் ஓட்டளித்தாலே, நான் முதல்வர் ஆகி விடுவேன்.

சட்டசபை இடைத்தேர்தலில் வென்றால், உங்களின் நிலை என்ன?
முதலில், திருப்பதி சென்று, நான், மகன் உதயநிதி, பேரன் ஆகியோர் முடி காணிக்கை கொடுத்து, மொட்டை போட்டு கொள்வோம். பின், பழனி சென்று, அலகு குத்தி, காவடி எடுத்து, முருகனை தரிசித்து விட்டு, முதல்வராக பதவி ஏற்பேன்.அழைப்பு விடுக்கிறேன். நான் முதல்வராக பதவி ஏற்கும்போது, தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும். நன்றி. இவ்வாறு, ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

நம்பிட்டீங்களா வாசகர்களே... ஏப்ரல், 1ம் தேதியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

- கவிதாஞ்சன்
சமூக ஆர்வலர்


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஏப்-201915:13:58 IST Report Abuse

balஇது கடவுள் பக்தியல்ல..பணம் சம்பாதிக்கும் வழி

Rate this:
rmr - chennai,இந்தியா
18-ஏப்-201911:03:58 IST Report Abuse

rmrஉலக மகா புழுகன் இவர் , வேண்டவே வேண்டாம்

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-ஏப்-201909:46:12 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கண்ணா உன் மஹிமையைபாறேன் ஒருபக்கம் சாமியே இல்லீன்னு கூவுவானுக பின்னாடி எம்மதமும் சம்மதம் தான் என்று ஷோ பண்ணுவானுக இவாளுக்கெல்லாம் குலசாமியே பெரியாரும் வேதம் அவர் எழுதிய நாஸ்திக தத்துவங்களுமேதான் சுடாலின் இங்கேஇப்படிக்கூத்து காட்ட தூத்துக்குடியே கனிமொழி ஆஹா ஓஹோ ன்னு கூத்து காட்டிண்டுருக்கா

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X