சென்னை:'ஹிந்து மதத்தை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்' என, சைவ ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சைவ ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள், சென்னையில் நேற்று பத்திரிகை நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அளித்த பேட்டி:பழம்பெரும் சமயமாக திகழ்ந்து கொண்டிருக்க கூடிய, ஹிந்து சமயத்தை பற்றி, இழித்தும், பழித்தும் பேசியவர்களை கண்டிப்பதற்காகவே, இங்கு இந்த துறவியர் குழு கூடி உள்ளது.உலகத்தில் இருக்க கூடிய, பெரும்பான்மை சமயங்கள் மதிக்கப்படுகின்றன.
ஆனால், நம் நாட்டில் மட்டும் தான், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான், தொன்மை மிகுந்த சமயத்தையும், தெய்வங்களையும், அருளாளர்களையும், நுால்களையும், இழித்தும், பழித்தும் பேசி வருகின்றனர்.இது, ஹிந்து சமய மக்களிடம், கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. யாரெல்லாம் ஹிந்து சமயத்தை ஆதரிக்கின்றனரோ, அவர்களை மக்கள் அடையாளம் கண்டு, ஓட்டு போட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE