பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் தரவரிசை பட்டியல்: மே 15ம் தேதி வெளியீடு

Added : ஏப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில், தரவரிசைப்பட்டியல், மே, 15ம்தேதி வெளியிடப்படுகிறது.உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டில், 814 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை, நடத்தப்படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த 10ம்தேதி முதல், கல்லுாரி அலுவலகத்தில் காலை, 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்., 22ம்தேதி முதல் கல்லுாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே 6ம் தேதி மாலை, 3:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், அதற்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் மே, 15ம் தேதி காலை, 11:30 மணிக்கு கல்லுாரியில் வெளியிடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கான கலந்தாய்வு, மே, 20ம் தேதி துவங்குகிறது.தொடர்ந்து தரவரிசைப்பட்டில், 1 முதல் 300 வரை உள்ள மாணவர்களுக்கு, வணிகவியல் பி.காம், பி.காம் சிஏ, பி.காம் (இ.காம்), பிபிஏ, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் மே 20ம்தேதி நடக்கிறது. வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு தரவரிசைப்பட்டியல் 301 முதல் 800 வரை உள்ளவர்களுக்கு 21ம்தேதி நடக்கிறது.
அறிவியல் பாடப்பிரிவுகளான, இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உள்ளிட்ட பாடங்களுக்கு, தரவரிசை 1 முதல் 600 வரை, 22ம்தேதி காலை, 9:30 மணிக்கும், 601 முதல் 800 வரை உள்ளவர்களுக்கு 23ம்தேதி காலையும் கலந்தாய்வு நடக்கிறது.23ம்தேதி அறிவியல் பாடப்பிரிவு கலந்தாய்வை தொடர்ந்து, தரவரிசை 1 முதல் 900 வரை உள்ளவர்களுக்கு இளங்கலைத் தமிழ் இலக்கியத்துக்கும், மதியம், 2:00 மணிக்கு ஆங்கிலப்பாடப்பிரிவு, தரவரிசை, 1 முதல் 900 வரை உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X