தி.மு.க.,வினர் உற்சாகத்தால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் 'உற்சாகத்தால்' அவதி

Added : ஏப் 14, 2019

சின்னாளப்பட்டி:உதயநிதி வருகைக்காக 'உற்சாகத்தில்' இருந்த தி.மு.க., தொண்டர்களின் செயல்களால் இரண்டு மணிநேரம் சின்னாளப்பட்டி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளருக்காக சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் நடிகர் உதயநிதி நேற்று வேனில் பிரசாரம் செய்தார். இதற்காக மாலை 4:00மணி முதல் சரக்குவாகனத்தில் தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். பலர் போதையில் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை விரட்டியடித்தபடி நின்றிருந்தனர். நிர்வாகிகளும் இதை கண்டு கொள்ளவில்லை.உதயநிதி வந்துவிட்டதாக கூறி மாலை 4:30மணி முதல் பூஞ்சோலை சந்திப்பில் வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பினர். செம்பட்டி, வத்தலக்குண்டு, திண்டுக்கல், மதுரை செல்லும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மாலை 6:05மணிக்கு வந்த உதயநிதி பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் வெற்றி முக்கியமல்ல, 22 சட்டசபை தொகுதிகளின் வெற்றியே தற்போதைய குறிக்கோள். அந்த பகுதியில் உள்ள உறவினர்களை தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க சொல்லுங்கள். அப்போது தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'' என்றார். பிரசாரம் முடிந்து வாகனங்கள் கலைந்து செல்ல தாமதம் ஏற்பட்டதால் மாலை 6:40மணி வரை போக்குவரத்து பாதித்தது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X