பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுரிமையை பணத்திற்கு விற்காதீங்க: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019
Advertisement
 ஓட்டுரிமையை பணத்திற்கு விற்காதீங்க: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்

செம்பட்டி:ஓட்டுரிமையின் மகத்துவத்தை வலியுறுத்தி, பாறைப்பட்டி பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதினர்.
தேர்தலில் ஓட்டுரிமையை பயன்படுத்துவது தொடர்பாக, அரசு, தொண்டு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஜனநாயக கடமை தொடர்பான சமூக வலியுறுத்தலுடன், மாணவர்கள் மூலம் ஊக்குவிக்கும் நடவடிக்கையை இப்பள்ளி பொது அறிவு மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.ஆத்துார் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இதற்காக பெற்றோருக்கு கடிதம் எழுதினர். பள்ளி தலைமையாசிரியர் மேரிஜூலியானா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு போஸ்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இதில் ஓட்டுரிமை ஜனநாயக கடமை. நல்லவர்களை தேர்வு செய்யுங்கள். அதனை பணத்திற்கு விற்காதீர்கள்' என, வலியுறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X