பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

Added : ஏப் 14, 2019
Advertisement
 வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், 'பூத் சிலிப்' கொடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியை முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.பொள்ளாச்சி லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளன.
இதில், பொள்ளாச்சி நகர் மற்றும் கிராமப்பகுதிகளில், வரும், 18ம் தேதி ஓட்டளிக்கும் வகையில், வீடு,வீடாக சென்று வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய 'பூத் சிலிப்'பை, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில், 'பூத் சிலிப்' வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதா என்பதை, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார், நகராட்சி கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, 'பூத் சிலிப்' நேரிடையாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், 'வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வாக்காளர் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் சரியாக உள்ளதா என பார்த்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை, 'பூத் சிலிப்' பயன்படுத்தி ஓட்டளிக்க முடியாது. இதனை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள, 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.'பூத் சிலிப்' கொடுக்கும் போது, நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.கரை வேட்டிக்கு 'குட்பை'வீடு, வீடாக 'பூத் சிலிப்' வழங்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை உதவி தேர்தல் அலுவலர் ஆய்வு செய்த போது, அங்கு தி.மு.க., கரை வேஷ்டி கட்டி வந்த நபரிடம், 'பூத் சிலிப்' அவர்கள் கொடுப்பர்; நீங்கள் செல்ல வேண்டாம்,' என அறிவுறுத்தினார்.அதற்கு, 'உதவி செய்வதற்காக வந்துள்ளேன்,' என, அவர் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், 'பூத் சிலிப்' கொடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும். இதற்காக, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியினர் யாரும் தலையீடு செய்யக்கூடாது, என அறிவுறுத்தினர்.கரை வேட்டிக்கு 'குட்பை'வீடு, வீடாக 'பூத் சிலிப்' வழங்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை உதவி தேர்தல் அலுவலர் ஆய்வு செய்த போது, அங்கு தி.மு.க., கரை வேஷ்டி கட்டி வந்த நபரிடம், 'பூத் சிலிப்' அவர்கள் கொடுப்பர்; நீங்கள் செல்ல வேண்டாம்,' என அறிவுறுத்தினார்.அதற்கு, 'உதவி செய்வதற்காக வந்துள்ளேன்,' என, அவர் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், 'பூத் சிலிப்' கொடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும். இதற்காக, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் யாரும் தலையீடு செய்யக்கூடாது, என அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X