கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் விவசாயி

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019
Share
 கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் விவசாயி

திருவாடானை:திருவாடானை அருகே கின்னஸ் சாதனைக்காக விவசாயி கடிதங்களை எழுதி வருகிறார்.

திருவாடானை அருகே அறுநுாற்றிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னபெருமாள் 49.சனவேலி மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வண்ணதமிழ் எழுத்துகளால் கடிதங்கள் எழுதி உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வருகிறார்.

தமிழ் மொழி வளர்ச்சி, சமூக நல மேம்பாடு, பொதுமக்களுக்கு தீர்க்கவேண்டிய பிரச்னைகளை கம்யூட்டர் எழுத்துகள் போல் கையெழுத்து வடிவத்தில் எழுதி அனுப்பி வருகிறார்.இவருடைய எழுத்து வடிவங்களை கோபுரங்கள், சிவன் சிலை, கண்ணகி சிலை, உலகம் உருண்டை போன்ற பல்வேறு வடிவங்களில் வடிவமைத்துள்ளார். உதாரணத்திற்கு சாலைகளில் விரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது போல் எழுதி வடிவமைத்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்.இது குறித்து சின்னபெருமாள் கூறியதாவது:

சிறுவயதில் எனக்கு பேச்சு வராது. இதனால் திருவெற்றியூர் பாகம்பிரியாள் தாயாரை வேண்டி பிரார்த்தனை செய்தேன். ஒன்பதாவது வயதில் பேச்சு வந்தது. கடிதம் எழுதும் முறையை வருங்கால சந்ததியினருக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆண்டு தோறும் செப்.,1 ல் உலக கடிதம் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய கணிபொறி உலகில் கையால் எழுதபட்ட கடிதம் எழுதுவது பெரிய விஷயமாகும். உலக கடித தினம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைபட கலைஞர் ரிச்சர்ட்சிம்கின் என்பவரால் 2014 ல் துவங்கப்பட்டது.இவர் 16,000 கடிதங்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வாசலில் சார் போஸ்ட் என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர்கள், நண்பர்கள் கடித்தை வாங்கி படிப்பார்கள். பின் ஒரு கடித்தை தபாலில் எழுதி அனுப்புவார்கள்.

ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரிப்பது தனிமதிப்பு. சுதந்திர போராட்டத்தின் போது சிறையிலிருந்த நேரு, மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது. நான் இதுவரை இன்று (ஏப்.14) 1000 கடிதங்களை எழுதியுள்ளேன்.2019க்குள் 2019 கடிதங்களை எழுதியும், அதன் பின் விரைவில் 20000 கடிதங்களை எழுதி கின்னஸ் சாதனையில் இடம் பெற முயற்சி செய்து வருகிறேன், என்றார். இவரை பாராட்ட 8098309735

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X