கிராம ஓட்டுக்களை கவர தந்திரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம ஓட்டுக்களை கவர தந்திரம்

Added : ஏப் 14, 2019

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிராமங்களில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த, அடிப்படை வசதி குறைபாடுகள், தேர்தல் நெருங்கும் நிலையில் அவசர அவசரமாக சரி செய்யப்படுகின்றன.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் உள்ள, 65 ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் ரோடு, சாக்கடை, தெருவிளக்கு என அடிப்படை வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, கிராம ரோடுகள், ஒன்றிய ரோடுகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் கிடந்தன.சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை எழுப்பிய போதெல்லாம், ஒன்றியத்தில் நிதி இல்லை என்பதே அதிகாரிகளின் பதிலாக இருந்தது.இதனால், ஆண்டுக்கணக்கில் மக்கள் கடும் மன உளைச்சலில் இருந்தனர். கடந்தாண்டு பலமாக பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பின், ரோடுகளின் நிலை மேலும் மோசமானது. ஆனால், அதிகாரிகள் சீரமைப்பு பணிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் காலகட்டம் நெருங்கியதும், அவசர அவசரமாக ரோடுகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பூஜை போடப்பட்டது. அப்போதும், உடனடியாக பணி துவங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், மேம்பாட்டு பணிகள் துவங்கி முழு வீச்சில் நடக்கிறது.தேர்தல் அவசரத்தில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதன் மூலம், கிராம மக்களின் ஓட்டுக்களை பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X