மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி?

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடிக்கு எதிராக லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிட உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



latest tamil news


கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என பிரியங்கா ஏற்கனவே அறிவித்துள்ளார்.ரேபரேலி அல்லது அமேதியில் போட்டியிடுவீர்களா என்று பிரியங்காவை செய்தியாளர்கள் கேட்ட போது, ஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாதா என்று திருப்பிக் கேட்டு அதிர வைத்தார்.


latest tamil news



இந்நிலையில் பிரியங்காவை மோடிக்கு எதிராக நிறுத்த காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுலே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். வாரணாசி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மோடி 3 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலை வென்று பிரதமரானார் மோடி.

அலகாபாத் மற்றும் வாரணாசி தொகுதிகளில் காங்.,ன் பலம் குறித்து அக்கட்சி ஆய்வு செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு தொகுதிகளுக்கும் காங்., இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதே போன்று உ.பி.,யில் லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் வாரணாசி தொகுதி சமாஜ்வாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சியும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-201904:41:53 IST Report Abuse
meenakshisundaram
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
15-ஏப்-201908:50:22 IST Report Abuse
Nallavan Nallavan கணவரின் பெயர் நாறியதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை .......
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
14-ஏப்-201918:41:42 IST Report Abuse
bal போன தடவை கெஜ்ரி தோற்று போனார்...இப்போ இந்த பெண்மணி...சொல்ல முடியாது இந்த மக்கள் மனப்பான்மையை. காங்கிரஸ் அடிமைகள் வோட்டு போடு விடுவார்கள்..அது தானே நடக்கிறது...அமேதியிலும் ராய்பரேலியிலும்...ஒன்றும் செய்யவில்லை என்றாலும் மக்கள் காங்கிரஸ்க்கு வோட்டு போடுகிறது. ராகுல், சோனியா, கனி, மாறன், கார்த்தி, ராசா எல்லோரும் ஜாமினில் வெளியில் இருக்கிறார்கள்..அது தெரிந்தும் கூட மக்கள் அவர்களுக்குத்தான் வோட்டு போடுகிறது.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
14-ஏப்-201918:57:56 IST Report Abuse
எதிர்க்குரல் அடுத்து ரபேல் ஊழலில் திளைத்து சிறை செல்ல போகிறவருக்கு மட்டும் எப்படி வாக்களிப்பதாம் ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X