தமிழ்நாடு

'காங்., ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வராது': முதல்வர் பேச்சு

Added : ஏப் 14, 2019
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில், முதல்வர் பழனிசாமி, கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் என்று கூறி, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார். காங்., கூட்டணி கட்சியினரே, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கின்றனர். இப்படி இருக்கையில் எப்படி மத்தியில், காங்., நிலையான ஆட்சியை தரும். கர்நாடாகாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், 'காவிரியில் புதிய அணை கட்டப்படும்' என, கூறியுள்ளார். இதனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய, 63 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்காது. விவசாயிகள் பாதிக்கப்படுவர். மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வந்தால் மட்டுமே, காவிரி ஆணையம் செயல்படுத்த முடியும். காங்., கட்சி வந்தால் காவிரி ஆணையம் கலைக்கப்படும். இப்பகுதியில், கிருஷ்ணராயபுரம் - கடவூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ஆகையால், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., கீதா, உட்பட பலர், பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

* இதேபோல், பெரம்பலூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் சிவபதியை ஆதரித்து, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே, முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது, 'குளித்தலை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, வாக்குறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X